Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 14, 2024

12 ஆண்டுகளுக்குப் பின் குருவோடு சேரும் சுக்கிரன் அதிர்ஷ்டம் எந்தெந்த ராசிகளுக்கும்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் சொகுசு ஆடம்பரம் வசதி உள்ளிட்டவை களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடமாறுகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிரன் ஒன்று சேர்க்கின்றார். இந்த நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நிகழ உள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சுக்கிரன் குரு சேர்க்கை உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய மாற்றங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கடக ராசி

குரு மற்றும் சுக்கிரன் இணைகின்ற காரணத்தினால் உங்களுக்கு ஆடம்பர வசதிகள் கிடைக்கும். அதிகரிக்கப் போகின்றது. கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் எதிர்பாராத அதிகரிப்பு இருக்கும். நண்பர்களால் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்கள். நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News