Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1 முதல் நடைபெற்ற வருகின்றது.
அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்றது போல மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிட்டு பாடவாரியாக ஆசிரியர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழ் வழி கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களை, ஆங்கில வழி ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment