Join THAMIZHKADAL WhatsApp Groups
நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும்.
தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் அதிகமாக காணப்படும் . இந்த ஆண்டு பருவ நிலை மாற்றத்தினால் கோடை வெப்பத்தின் தாக்கம் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது . பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் . பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும், மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிக்கையில்; நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும். மேலும் , 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் -16 ம் தேதி முதல் ஏப்ரல் 30 ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் நடத்திடும் நிகழ்வுகளை மத்திய கல்வி அமைச்சக வலைதள இணையத்தில் அல்லது இணைப்பில் புகைப்படமாகவோ , ஒளிக் காட்சியாகவோ, வீடியோ படமாகவோ அல்லது அறிக்கையாகவோ பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் , மத்திய கல்வி அமைச்சகத்தின் கடிதத்தின் படி பரிந்துரைக்கப்பட்ட பங்கேற்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment