Join THAMIZHKADAL WhatsApp Groups
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும், சமவேலைக்கு சமஊதியம் கேட்டும் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திய பள்ளி ஆசிரியர்களின் 19 நாளுக்கான சம்பளம் மற்றும் பிற பணப்பலன்களை பிடித்தம் செய்ய வேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு உள்ளதாகவும், இதை சரிசெய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றம் செய்யவில்லை.
இந்நிலையில் தான் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் 19 ம் தேதி இடைநிலை அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் என்பது பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது.
இந்த போராட்டம் என்பது தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் நடந்தது. மாவட்ட வாரியாக போராட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம் பிப்ரவரி 8 ம் தேதி வரை நடந்தது. அதன்பிறகு தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தான் 19 நாட்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பிற பணப்பலன்களை பிடித்தம் செய்ய வேண்டும் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய முன்னறிவிப்பு இன்றி இந்த போராட்டத்தை ஆசிரியர்கள் மேற்கொண்டதால் 19 நாளுக்கான சம்பளம் மற்றும் பணப்பலனை பிடித்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணி பதிவேட்டில் பதிய வேண்டும். சம்பளம் மற்றும் பணப்பலன்களை ஒரே தவணையாக பிடித்தம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பிற மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment