Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்த கல்வி ஆண்டின் இறுதிப் பணி நாள் 26ம் தேதியுடன் முடிவடைவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த 13ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 15, 16, 17ம் தேதிகளில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும்.
18, 19ம் தேதி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி நாள். 20, 21ம் தேதி விடுமுறை. 22 மற்றும் 23ம் தேதிகளில் கீழ் வகுப்புகளுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடக்கும். 24ம் தேதி முதல் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், 24, 25, 26ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும். 26ம் தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment