Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 18, 2024

ஏப்ரல் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் திடீர் அறிவிப்பு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தென்னகத் திருப்பதி என அழைக்கப்படுவது அரியலூர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடத்தப்படும்.

அந்த வகையில் நடப்பாண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 25ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏப்ரல் 25ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 25ம் தேதி வியாழக்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது.

கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்வு நடைபெறும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.அத்துடன் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும்வகையில் மே 4ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News