Join THAMIZHKADAL WhatsApp Groups
பான் அட்டையில் உள்ள உங்களுடைய பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகிய இரண்டு விவரங்களும் ஒரு குறிப்பிட்ட "ஆவணத்துடன்" பொருந்த வேண்டுமென்றும்..
இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அதை வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் திருத்திக்கொள்ள வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டில் (PAN Card) உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி விவரங்கள் எதனுடன் பொருந்த வேண்டும்? அப்படி பொருந்தவில்லை என்றால்.. ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பின்னர் என்னென்ன சிக்கல்களை சந்திக்க நேரிடும்? இந்த உத்தரவு எங்கிருந்து வந்துள்ளது? இது யாருக்கு எல்லாம் பொருந்தும்? இதோ விவரங்கள்:
எதனுடன் பொருந்த வேண்டும்? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோவில் (Mutual Fund Folio) உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி விவரங்கள் ஆனது பான் கார்டு அல்லது மற்ற அடையாள அட்டையில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதியுடன் பொருந்த வேண்டும்.
பொருந்தவில்லை என்றால் என்னவாகும்? மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ மற்றும் பான் அட்டையில் உள்ள பெயர் மற்றும் பொருந்தவில்லை என்றால், இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் ஏப்ரல் 30, 2024க்குள் சரிசெய்யப்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பின்னர் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பரிவர்த்தனை நிராகரிப்பை (Transaction Rejection) சந்திக்க நேரிடும்.
இந்த உத்தரவு எங்கிருந்து வந்துள்ளது? இது எம்எப் சென்ட்ரல் (MF Central) மற்றும் சிஏஎம்எஸ் (CAMS) போன்ற மியூச்சுவல் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஏஜென்சிகளிடம் இருந்து வந்துள்ளது. முதலீட்டாளரின் பான் ற்றும் எம்எப் ஃபோலியோ ஆகிய இரண்டிற்கும் இடையேயான பெயர் / பிறந்த தேதியில் உள்ள பொருத்தமின்மை ஆனது பணப் பரிமாற்ற நிராகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அறிவித்துள்ளன.
மேலும் எம்எப் சென்ட்ரல் மற்றும் சிஏஎம்எஸ்-ன் கூற்றுப்படி, இந்த ஆணை செபியின் (Securities and Exchange Board of India -SEBI) சமீபத்திய வழிகாட்டுதல்கள் மற்றும் வருமான வரித் துறையின் (Income Tax) பான் சரிபார்ப்பு செயல்முறையின் மாற்றங்களுக்கு ஏற்ப உள்ளது. தடையற்ற சரிபார்ப்பை உறுதிசெய்ய, முதலீட்டாளர்கள் அனைத்து விண்ணப்பங்களிலும் கேஒய்சி படிவங்களிலும் (KYC Forms) சரியான பெயர் மற்றும் பிறந்த தேதி விவரங்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில், ரூ.1000 அபராததுடன் பான் கார்டு தொடர்பான புதிய மாற்றம் அமலுக்கு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அது பான் - ஆதார் இணைப்பு தொடர்பான காலக்கெடு ஆகும். ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு பான்-ஆதாரை இணைபவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும் என்பதே அந்த கட்டாய மாற்றமாகும்.
ஒருவேளை நீங்கள் இன்னமும் உங்களுடைய பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால் ஆன்லைன் வழியாக அதை செய்வது எப்படி என்கிற வழிமுறைகள் இதோ: முதலில் வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) செல்லவும். அங்கே ஹோம் பேஜின் இடது புறத்தில் உள்ள குவிக் லிங்க்ஸ் என்கிற என்ற தலைப்பின் கீழ் லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
பின்னர் உங்கள் பான் மற்றும் ஆதார் நம்பரை உள்ளிட்டு வேலிடேட் (Validate) பட்டனை கிளிக் செய்யவும். அபராதம் குறித்து 'உங்கள் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டன' என்று ஒரு பாப்-அப் மெசேஜ் (Pop-up Message) தோன்றும். அதனை தொடர்ந்து பாண்-ஆதார் இணைப்பிற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க, கன்ட்டினியூ (Continue) பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது தேவையான விவரங்களை உள்ளிட்டு லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வந்த ஒடிபி (OTP) நம்பரை உள்ளிடவும். அவ்வளவு தான் பான்-ஆதார் அட்டையை இணைப்பதற்கான உங்களது கோரிக்கை (Request to link the PAN-Aadhaar card) வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.
No comments:
Post a Comment