Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்து நோயாளி உயிரிழந்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கும் புதிய சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மருத்துவர்கள் பணியின்போது அலட்சியத்துடன் சிகிச்சை அளித்து நோயாளி உயிரிழந்தால் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு தண்டனை வழங்கும் வகையில், கடந்த ஆண்டு 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.
தற்போது புதிய சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "மருத்துவர்கள் பணியின் போது அலட்சியமாக இருந்து நோயாளி உயிரிழந்தால், அது குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்டு இந்திய குற்றவியல் சட்டம் 304ஏ 1860ன் படி அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது." தற்போது பழைய சட்டத்திற்கு மாற்றாக, புதிதாக பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய சாஷிய அதிநியம் என்ற 3 புதிய சட்ட திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment