அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்த டி.டி.எஸ்., வரியை உரிய கணக்கில் சேர்க்காதவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவது வாடிக்கை.. அந்த வகையில் பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள், ஊழியர்களிடம் பிடித்த டி.டி.எஸ்., வரியை உரிய கணக்கில் சேர்க்காத 5,563 பேருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
டிடிஎஸ் என்றால் என்ன? உங்கள் சம்பளத்தில் கழிக்கப்பட்ட வரி தான் டிடிஎஸ் ஆகும். வருமான வரிச் சட்டம் பிரிவு 194Q-ன் படி, எந்தவொரு நிறுவனம் அல்லது தனிநபர் செலுத்தும் தொகை ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அந்த மூலத்தில் வரியைக் கழிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. வாடகை, கன்சல்டிங், ராயல்டி, தொழில்நுட்ப சேவை போன்ற பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க ரூ. 50 லட்சத்துக்கு மேல் செலவழிக்கும் போது இது கழிக்கப்படும். TDS விகிதங்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் மத்திய அரசால் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் உங்கள் நிறுவனத்தின் முதலாளி வரியைக் கழித்துள்ளார். டிடிஎஸ் வடிவில் கழிக்கப்படும் இந்தத் தொகை, பின்னர் முதலாளி மூலம் அரசிடம் (வருமான வரித்துறைக்கு) டெபாசிட் செய்யப்படுகிறது. எனினும் TDS-ஐக் கழிப்பதற்கு முன், ஒரு முதலாளி TAN பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளத்தில் டிடிஎஸ் கணக்கீடு எப்படி: நீங்கள் வேலைக்குச் சேரும் போது முதலாளி உங்களுக்கான தரும் டிராவல் அலவன்ஸ், மெடிக்கல் அலவன்ஸ், வீட்டு வாடகை அலவன்ஸ், அகவிலைப்படி, சிறப்பு அலவன்ஸ், அடிப்படைச் சம்பளம் மற்றும் பிற கூடுதல் அம்சங்கள் போன்ற பல்வேறு விஷயங்களை அடிப்படையாக வைத்து டிடிஎஸ் கணக்கிடப்பட்டு பிடிக்கப்படுகிறது. அதாவது சிம்ப்பிளாக சொல்ல வேண்டும் என்றால், மாத சம்பளம் வாங்குவோரிடம் வருமான வரியை மாதம் மாதம் கணக்கிட்டு பிடிக்க வேண்டும். அந்த வரி தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும்.. அப்படி வரியை பிடித்து, அரசுக்கு செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்கள் கடும் சிக்கலை சந்திக்கும்..
அதாவது அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, மாத ஊதியம் வழங்கும் நிறுவனங்கள் (அதாவது ஹெச்ஆர்கள்) அவர்களிடம் வருமான வரிக்கான டி.டி.எஸ்., தொகை பிடித்தம் செய்வது கட்டாயம் ஆகும். இந்த தொகையை, சம்பளம் வழங்கும் பொறுப்பு அதிகாரி, வருமான வரித்துறைக்கு செலுத்தினால் மட்டுமே, அந்த தொகை, சம்பந்தப்பட்ட நபரின் வருமான வரி கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களிடம் மாதந் தோறும், டி.டி.எஸ்., பிடித்தம் செய்யும் தொகையை அரசின் கணக்கில் செலுத்திவிட்டு, வருமான வரித்துறைக்கு ரிட்டர்ன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இந்நிலையில், கடந்த 31ம் தேதியுடன் முடிந்துள்ள நிதியாண்டில், பள்ளி கல்வித்துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல், ரிட்டர்ன் அறிக்கை தாக்கல் செய்யாமல், நிலுவையில் உள்ளதை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளதுது..
இதையடுத்து, சம்பளம் வழங்கும் அலுவலர்களாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட 5,563 பேருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி, அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment