Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 7, 2024

நாளை ஏப்.8 முதல் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்... ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், நாளை ஏப்ரல் 8 ம் தேதி முதல் தபால் வாக்குப்பதிவு துவங்குகிறது.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிப்பார்கள்

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க 85வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. 

அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்தே தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் 12டி படிவம் மார்ச் 20ம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.


3 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். இதற்காக சென்னையில் மட்டும் 4,676 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 85வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு 45716 விண்ணப்ப படிவங்களும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு 9639 விண்ணப்ப படிவங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News