Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ் வருடங்களில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஷோப கிருது வருடம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.
குரோதி தமிழ் புத்தாண்டு விரைவில் வர இருக்கும் நிலையில் தமிழ் புத்தாண்டில் நம்ம ராசிக்கு என்ன நடக்கப் போகுது. இந்த வருஷமாவது வியாபாரத்த விரிவு பண்ணலாமா, வேலையில் புரோமோஷன் கிடைக்குமா, வீடு வாங்க வழியிருக்கா, சுபகாரியம் கைகூடுமா என பலரும் காத்துக் கிடக்கின்றனர். குரோதி தமிழ் புத்தாண்டு திருநாள் ஏப்ரல் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வர இருக்கிறது. சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
குரோதி தமிழ் புத்தாண்டு திருநாளில் குருபகவானும் இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றமே 12 ராசிகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது. இதுபோல பல்வேறு கிரகங்களின் மாற்றத்தால் 12 ராசிகளுக்கும் கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றன. அவர்களுக்காகவே இதோ பிறக்க இருக்கும் குரோதி புத்தாண்டு ராசி பலன்கள்:
மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களே
புத்தாண்டு நாளில் குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை அள்ளித் தரப்போகிறது. குறிப்பாக ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு குரு உங்களுக்கு அநேக நன்மைகளை வாரி வழங்கப் போகிறார். இதனால் எதிர்பார்த்த பணவரவும், குடும்பத்தில் குதூகலமும் தேடி வரும். தொழில் ரீதியான முன்னேற்றங்கள் உண்டு. அலுவலகத்தில் பதவி உயர்வு கிட்டும். குடும்பத்தில் சுப காரியம் கைகூடும். எடுத்த காரியங்களில் வெற்றி என அனைத்து யோகங்களும் பொறுமையாக கிடைக்கும் .
ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களே
தமிழ் புத்தாண்டு சிறப்பான புத்தாண்டாக அமைய இருக்கிறது. ஏற்கனவே ராகு 11ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலையில் குருவும் ராசிக்குள் பிரவேசிக்கிறார். வாழ்க்கையில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என சிந்திப்பவர்களுக்கு இனி பொற்காலம் தான். இதுவரை இருந்த பலவகையான விரயச் செலவுகள், வீண் அலைச்சல்களிலிருந்து இனி விடுதலை. எல்லாமே மாறப்போகுது. வரக்கூடிய காலங்கள் மிக சாதகமாக இருக்கிறது. குறிப்பாக இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள் சுப காரியங்கள் கைகூடும். இதுவரை இருந்த தடைகள் விலகி ஓடும். சுக்கிரன் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வதால் வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்
மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே
உங்களுடைய சுகஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதால் எதிர்பாராத சிக்கல்கள் வரலாம். குறிப்பாக பணியிடத்தில் மாற்றங்கள் நிகழலாம். இதுவரை கொஞ்சம் சிரமமான காலம் தான். புத்தாண்டுக்கு பிறகு இழந்த பேர் , புகழ் திரும்ப கிட்டும். 11ம் வீட்டிலிருந்து குரு பகவான் பெயர்ச்சியாகி 12ம் வீட்டிற்கு வருவதால் பெரிய கஷ்டம் வந்து விடுமோ என்ற கவலை இனி தேவையில்லை. இதுவரை இருந்த பெரிய கடன்களை அடைப்பீர்கள். .
கடக ராசி
கடக ராசி நேயர்களே
இதுவரை வாய்ப்பு அமையவில்லையே, வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லையே என பல சங்கடங்களை சந்தித்து இருக்கலாம். தமிழ் புத்தாண்டு முதல் எல்லாமே மாறப் போகுது. வாய்ப்புக்கள் வரிசை கட்டி நிற்கும். தொழிலில் முன்னேற்றம், பணியிடத்தில் பதவி உயர்வு கிட்டும். எதிர்பார்த்த லாபத்துடன் திடீர் அதிர்ஷ்டமும் சேர்ந்து வரப்போகுது. 11 ம் வீட்டில் வரும் குரு பகவான் அனைத்து விதமான நன்மைகளையே செய்வார். மிகப்பெரிய யோகங்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே வெற்றியாக முடியும். வீடு மனை வாங்கி மகிழ்வீர்கள். அஷ்டமத்து சனியின் ஆதிக்கத்தால் . உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டாலும் குருவின் தாக்கத்தால் அனைத்தும் தவிடு பொடியாகப் போகிறது.
சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களே
இதுவரை 9ம் வீட்டில் இருந்த குரு பகவான் 10 வீட்டிற்கு மாறுகிறார். இதனால் சுப விரயங்கள் ஏற்படலாம். கடின உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம். பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்ற போதிலும் சில சங்கடங்கள் வந்து சேரும். இதனால் உடல் நலக் குறைபாடுகளும் ஏற்படலாம். மாணவர்களுக்கு இது பொன்னான காலம். விரும்பிய படிப்புக்களை படிக்க வாய்ப்புக்கள் தேடி வரும். வந்த பணம் எல்லாம் மற்றொரு புறம் செலவுக்கு சரியாக இருக்கும். கலவையான பலன்கள் கிட்டும். எந்த காரியங்களிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் முக்கியம்.
கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே
இந்த தமிழ் புத்தாண்டில் அற்புதமான பலன்களை பெறப் போகிறீர்கள் . 9ம் இடத்துக்கு வரும் குரு பகவான் உங்களுடைய வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றப் போகிறார். இதுவரை இருந்த ஒளிவு மறைவு நிலை முற்றிலும் மாறி அனைத்து காரியத்திலும் முன் நின்று நடத்தக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுடைய செயல்களுக்கு பாராட்டுக்களும், மேன்மையும் வந்து குவியப் போகிறது. 5ம் வீட்டை குரு பார்ப்பதால் குழந்தைப்பேறு தாமதமானவர்களுக்கு அது கிடைக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு ஏற்றமான பலன்களே நடக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம், சுபகாரியம், கல்வி கேள்விகளில் மேன்மை, என எந்த காரியத்திலும் வெற்றி தான். அதே நேரத்தில் வாழ்க்கை துணையோடு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இதனால் வீட்டில் பொறுமையை கடைப்பிடிப்பது உத்தமம்.
துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே
வரப்போகும் தமிழ் புத்தாண்டு நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரு. பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். கடினமான சூழ்நிலைகளை கூட மிக எளிதாக கையாளுவீர்கள். ராசியில் குரு பகவான் எட்டாவது வீட்டில் பயணம் செய்ய உள்ளார். குரு பகவானின் இடமாற்றம் சாதகமாக அமைந்துள்ளது. சுபகாரியம் கைகூடும். பல்வேறு சூழல்கள் சாதகமாக அமையும் என்றாலும் உடல் நலனில் அக்கறை அவசியம்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி நேயர்களே
வரப்போகும் தமிழ் புத்தாண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது. இதுவரை ராசிக்கு 6ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பெயர்ச்சி ஆகி 7ம் இடத்திற்கு வருகிறார். இதுவரை தடைபட்ட அனைத்து காரியங்களும் நடைபெறும். குரு பகவான் 7ம் வீட்டில் அமர்வதால் நீண்ட நாட்களாக தள்ளிப் போட்ட காரியங்கள் மளமளவென முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் வம்பு வழக்குகள் நீங்கி வாழ்க்கை வளமாகும். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படலாம்.மன நிலைமையை சீர்குலைக்கும் விஷயங்கள் அவ்வப்போது நடக்கலாம்.
தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே
5 இடத்தில் இருந்த குரு பகவான் 6 ம் இடத்திற்கு செல்கிறார். இதனால் கேட்ட இடத்தில் கடன் கிட்டும். பொன், பொருள் ஆபரண சேர்க்கை கூடும் . இதுவரை இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். மறைமுக எதிரிகள் தவிடுபொடியாவார்கள். தொழிலில் முன்னேற்றம் பெருகி லாபம் கிட்டும். குடும்ப மேன்மை உண்டாகும் தனவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிட்டும்.
மகர ராசி
மகர ராசி நேயர்களே
வரப்போகும் தமிழ்ப் புத்தாண்டு அற்புதமான பலன்களை தரப்போகிறது. இதுவரை இருந்த மனக்குழப்பம், உடல் நலக்குறைபாடு நீங்கி வாழ்க்கை வளமாகப் போகிறது. குரு பெயர்ச்சியாகி 5 ம் இடத்திற்கு வர இருக்கிறார்.தள்ளிப்போன குழந்தையின்மை பிரச்சனைக்கு சுபமுடிவு ஏற்பட்டு மழலைச்செல்வம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் பற்று முன்னோர்கள், குருவின் ஆசிர்வாதம் கிடைத்து மேன்மை உருவாகும். எதிரிகளால் தொல்லை நீங்கி குடும்பத்தில் ஆதரவு பெருகும்.
கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே
புத்தாண்டு தினத்தில் குரு பெயர்ச்சியாகி 4ம் இடத்திற்கு வருகிறார். இதனால் வாகனம், வீடு யோகம் கிட்டும். தொழிலில் முன்னேற்றம் அடைந்து இரட்டிப்பு லாபம் பெருகும். பண வருவாய் உயரும். நடந்து வரும் ஜென்ம சனியால் பாதிப்பு அதிகமில்லை உங்கள் ராசி அதிபதி சனிபகவான். மன உளைச்சல், ஆரோக்கிய குறைபாடு வந்து விலகும். புதிய முயற்சிகளில் நற்பலன்கள் கிட்டும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடப் போகிறீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் பாராட்டுக்களை பெறுவீர்கள். இதுவரை இருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக சுபமுடிவுக்கு வரும்.
மீன ராசி
மீன ராசி நேயர்களே
தமிழ் புத்தாண்டு தினத்தில் குரு 3ம் இடத்திற்கு நகர்கிறார். இதனால் எதிர்பாராத யோகம் உண்டு. பழைய வீட்டை புதுப்பித்தல், வாகனம் வாங்குதல் என பலன்களை பெறப் போகிறீர்கள். சுபகாரியம் கைகூடும். தொழிலில் கடின உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம். முயற்சிகளால் மேன்மை அடையலாம். பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கி நல்ல பலன்களை எதிர்பாருங்கள். விரயச் செலவுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் சிக்கனத்தை கடைப்பிடித்தல் உத்தமம்.
No comments:
Post a Comment