Join THAMIZHKADAL WhatsApp Groups
4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஏப்.12 வரை பள்ளிக்கு வரவேண்டும்: கோடை விடுமுறையில் மீண்டும் திருத்தம்
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்ரல் 10, 12-ல் நடக்க இருந்த தேர்வுகள் ஏப்ரல் 22, 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.
இதையடுத்து, ‘ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகள் காரணமாக மாணவர்களுக்கு ஏப்ரல் 6 (இன்று) முதல் 21-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அவர்கள் மீண்டும் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தால் போதும்’ என்று அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதிவிருப்பமொழி பாடத் தேர்வு நடத்தப்பட வேண்டும். மேலும், நீண்ட விடுமுறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் கோடை விடுமுறையிலும் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன் விவரம்:
:தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் (நேற்று) பருவதேர்வு முடிந்துவிட்டது. அவர்களுக்கு 6-ம் தேதி (இன்று) முதல் கோடை விடுமுறை. 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏப்.8, 10, 12-ம் தேதிகளில் பள்ளிக்குவந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். இடைப்பட்ட தினங்கள் அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள்.
அதன்பிறகு, தேர்தல் பணிகள் காரணமாக ஏப்,15 முதல் 21-ம் தேதிவரை மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப். 22, 23-ம்தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். ஏப். 24 முதல் கோடை விடுமுறை விடப்படும்.
ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப். 26வரை பள்ளிக்கு வருவது அவசியம்.அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment