நீட் தேர்வு எழுதும் பெரும்பாலான மாணவர்களின் கனவு எம்.பி.பி.எஸ். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதனால் கடுமையான போட்டி நிலவுகிறது. எனவே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் தான் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும். இருப்பினும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கவலை பட வேண்டும். எம்.பி.பி.எஸ் தவிர அதற்கு இணையான பல்வேறு மருத்துவ படிப்புகள் உள்ளன.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) மூலம் MBBS, BDS, BSMS BHMS, BAMS, BUMS, BPT மற்றும் BVSc படிப்புகளில் சேர்க்கை பெறலாம். MBBS சேர்க்கைக்கு அதிக கட்-ஆஃப் தேவைப்படும் நிலையில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்வியைத் தொடர கீழ்கண்ட மருத்துவப் படிப்புகளில் சேரலாம்.
MBBS தவிர மற்ற மருத்துவப் படிப்புகளின் பட்டியல்
இளங்கலை பல் மருத்துவம் (BDS)
இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BSMS)
இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS)
இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BHMS)
இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BUMS)
இளங்கலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் (BNYS)
இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc மற்றும் AH)
No comments:
Post a Comment