Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 20, 2024

வாட்ஸ்அப் இன்பாக்ஸில் பழைய செய்திகளை இனி கண்டுபிடிப்பது ஈஸி!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
யூசர்களின் எதிர்பார்ப்புகளை விரல் நுனியில் நிறைவேற்றும் விதமாக வாட்ஸ்அப்பில் அடிக்கடி புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. பழைய செய்திகளை வாட்ஸ்அப் இன்பாக்ஸில் இனி ஈஸியாக கண்டுபிடிக்கலாம். வாட்ஸ் அப் மெசேஜ்களில் இன்பாக்ஸ் முழுவதும் தேவையான மெசேஜ்கள், பைல்களை நொடியில் கண்டுபிடித்துவிடும் வகையில் பில்டர் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய அம்சம் என்ன?

நியூ பில்டர்ஸ் அம்சத்தில் All, Unread மற்றும் Group, ஃபோட்டோஸ், வீடியோ, லிங்க்ஸ், ஜிஃப், ஆடியோ, டாக்குமென்ட், Polls போன்ற ஆப்ஷன் இருக்கும். பிரைவேட் இன்பாக்ஸில் அனுப்பப்பட்ட ஃபோட்டோகள், வீடியோ, லிங்க் போன்றவற்றை 'சர்ச்' செய்து காணலாம். ஆனால், இனி மொத்த வாட்ஸ் அப் -லும் மேலே கொடுக்கப்பட்டுள்ள 'Search' டேபில் தேவையான்வற்றை டைப் செய்தால் மொத்த டேட்டாவும் கிடைத்துவிடும். இதன் மூலம் தனித்தனியாக மெசேஜ்களை படிக்கலாம். வாட்ஸ்அப் ஹோம் ஸ்கிரின் பக்கத்தில் இந்த அம்சம் இடம்பெறுகிறது. தற்போது படிப்படியாக இந்த அம்சம் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

மெட்டா நிறுவனம் விளக்கம்

உதாரணமாக 'Unread' என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் படிக்காமல் / ஓபன் பண்ணாத மெசேக் விண்டோக்களை எடுத்து கொடுத்துவிடும். 'Photos' என்று டைப் செய்தால் மொத்த வாட்ஸ் அப்-ல் உள்ள ஃபோட்டோக்களை காண்பிக்கும். ஃபில்டர் செய்து தேவையானவற்றை வழங்கும் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. " ஃபில்டர்ஸ் பயனாளிகளுக்கு மெசேஜ்களை ஆர்கனைஸ் செய்ய உதவும். மிக முக்கியமான உரையாடல்களைக் கண்டறிவதோடு, வாட்ஸ் அப் பயன்பாட்டை மிகவும் எளிதாக பயன்படுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். மிகவும் முக்கியமானவற்றில் கவனம் செலுத்த உங்களுக்கு உதவ, நாங்கள் தொடர்ந்து கூடுதல் அம்சங்களை உருவாக்குவோம்," என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் அடுத்த அப்டேட் என்ன?

WABetaInfo இன் படி, WhatsApp "Contacts" போன்ற ஃபில்டர்களையும் வடிவமைத்து வருகிறது. இது மக்கள் தங்கள் கான்டெக்ட்களில் சேமித்துள்ள மொபைல் எண்களில் இருந்து பெறப்பட்ட மெசேஜ்களைப் பார்க்கவும் அவற்றில் 'Favorite' என்று டேக் செய்யவும் வழிவகுக்கும். 'பிடித்தவை' என்ற ஃபில்டரும் விரைவில் அறிமுகமாகலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வாட்ஸ்அப் ஸ்டேடஸில் இன்னும் சில அப்டேட்டுகளும் வர இருக்கின்றன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News