Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 16, 2024

நீட், ஜே.இ.இ தேர்வுக்கு புதிய இணையதளங்கள்; என்.டி.ஏ அறிமுகம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
2024 அமர்வுத் தேர்வுகளுக்கான தேசிய தேர்வு முகமை (NTA) ஜே.இ.இ முதன்மைத் தேர்வு (JEE Main), நீட் தேர்வு (NEET) மற்றும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) உள்ளிட்ட புதிய இணையதளங்களைத் தொடங்கியுள்ளது.

ஜே.இ.இ மெயின், நீட் மற்றும் க்யூட் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான தகவல்களையும் புதுப்பிப்புகளையும் தேர்வுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய மையப்படுத்தப்பட்ட தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் (https://exams.nta.ac.in/) விண்ணப்பதாரர்கள் இப்போது காணலாம்.

JEE Main, NEET UG, CUET UG: NTA launched new websites for these exams

ஒவ்வொரு தேர்வுக்கும் பிரத்யேக பக்கங்களுக்கு எளிதான வழிசெலுத்தலை வழங்க இணையதளம் முயல்கிறது, இது அனைத்து தேர்வு எழுதுபவர்களுக்கும் நெறிப்படுத்தப்பட்ட அனுபவத்தை உறுதி செய்கிறது.

JEE முதன்மை தேர்வு 2024 புதுப்பிப்பு — https://jeemain.nta.ac.in/

பொறியியல் கல்லூரிகளில் சேரவும், இந்தியாவில் ஜே.இ.இ அட்வான்ஸ்டுக்கு தகுதி பெறவும் கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ மெயின்) நடத்தப்படுகிறது. இந்த தேர்வு கலப்பின முறையில் நடத்தப்படுகிறது. தாள் 1 (B.Tech/B.E) ஆன்லைனில் நடத்தப்படுகிறது, அதே சமயம் தாள் 2 (B.Arch) தேர்வில் ஆப்டிட்யூட் மற்றும் கணித பகுதிகள் ஆன்லைனிலும், வரைதல் பகுதிகள் ஆஃப்லைன் (பேனா மற்றும் காகிதம்) மூலமும் நடைபெறுகிறது.

ஜே.இ.இ முதன்மை தேர்வு 2024 இரண்டாம் அமர்வுத் தேர்வு ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்றது மற்றும் முடிவுகள் ஏப்ரல் 25 அன்று அறிவிக்கப்படும்.

ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1 வரை நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான ஜனவரி அமர்வு முடிவு பிப்ரவரி 12, 2024 அன்று வெளியிடப்பட்டது. ஒரு தேர்வர் இரண்டு அமர்வுகளிலும் கலந்துக் கொண்டால், சிறந்த மதிப்பெண் தகுதி மற்றும் தரவரிசைக்கு பரிசீலிக்கப்படும்.

க்யூட் தேர்வு (CUET UG 2024)

தேசிய தேர்வு முகமை இந்த ஆண்டு பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு இளங்கலை (CUET UG) தேர்வுக்கான இணையதள முகவரியை மாற்றியுள்ளது. புதிய இணையதளம் https://exams.nta.ac.in/CUET-UG/ முன்னதாக, அனைத்து தகவல்களும் cuet.samarth.ac.in இல் பதிவேற்றப்பட்டன.

மேலும், அட்மிட் கார்டுகள், முடிவுகள், அறிவிப்புகள் போன்ற அனைத்து CUET தேர்வு தொடர்பான தகவல்களும் தேசிய தேர்வு முகமையால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தளத்தில் வெளியிடப்படும்.

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பங்கேற்கும் நிறுவனங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர விரும்புவோர், பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (UG)- 2024 இல் கலந்துகொள்ளலாம்.

மே 15 முதல் 31ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டு, ஜூன் 30ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.

நீட் தேர்வு (NEET UG 2024)

புதிய நீட் தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளம் https://neet.ntaonline.in/ ஆகும். இளங்கலைப் பட்டதாரிகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) என்பது MBBS, BDS, AYUSH படிப்புகள் (BAMS, BUMS, BYNS, BHMS, BSMS), கால்நடை அறிவியல் (BVSc & AH), நர்சிங் படிப்புகள் போன்ற மருத்துவத் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான தேர்வாகும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனங்களில் மருத்துவக் கல்விக்கான தகுதியை வழங்குகிறது.

நீட் தேர்வு மே 5 அன்று நடைபெறும். முடிவுகள் ஜூன் 14 அன்று அறிவிக்கப்படும்.

தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர் இணையதளத்தில் மாற்றத்திற்கான காரணத்தை விளக்கி கூறினார்: 'இதுவரை, ஜே.இ.இ மெயின் ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை NIC (National Informatics Centre) ஹோஸ்ட் செய்து வந்தது. இப்போது தேசிய தேர்வு முகமை இந்தப் புதிய தளத்தை உருவாக்கி, ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை ஹோஸ்ட் செய்வது மற்றும் சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப், அட்மிட் கார்டு மற்றும் ஸ்கோர் கார்டு போன்றவற்றை உருவாக்குவது தொடர்பான செயல்பாடுகளுக்கு அதன் சொந்த சர்வரைப் பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

புதிய இணையதளத்தில் தன்னியக்க சாட்டிங் அம்சமும் உள்ளது, இது ஆர்வலர்களுக்கு ஆன்லைன் உதவியாளராக செயல்படுகிறது. மாணவர்கள் இந்த ஆன்லைன் சாட்டிங் விருப்பத்தை கீழ் வலது மூலையில் காணலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News