Join THAMIZHKADAL WhatsApp Groups
தலைமை குணம் கொண்டு சகல விஷயங்களிலும் முன்னின்று நடத்த விரும்பும் மேஷ ராசி அன்பர்களே, இந்தக் குரோதி வருடம் உங்கள் ராசிக்கு 3 -ம் வீடான மிதுனத்தின் சந்திரன் அமர்ந்திருக்கும்போது பிறக்கிறது.
இது மிகவும் ஒரு நல்ல தொடக்கம் என்றே சொல்லலாம். செயல்கள் அனைத்தும் வெற்றியாகும். இதுவரை பிரச்னையாக இருந்து தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். சகோதரர்கள் உங்களுக்கு சகல ஒத்துழைப்பும் வழங்குவார்கள். இதுவரை இழுத்துக்கொண்டிருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும்.
உங்கள் ராசிக்கு 5 -ம் இடத்துக்கு உரிய சூரிய பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே உங்கள் புண்ணிய பலன்கள் வேலை செய்யத் தொடங்கும். தடைப்பட்டுக்கொண்டிருந்த வாய்ப்புகள் தேடிவரும். பூர்விக சொத்தை வாங்குவதோ விற்பதோ லாபகரமாக முடியும். இதுவரை முயன்றும் வெளிநாடு செல்ல முடியாமல் தவித்தீர்களே... இனி அந்த நிலை மாறும்.
இந்த ஆண்டு முழுவதும் கேது உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான கன்னியில் சஞ்சாரம் செய்வதால் மனத்தில் ஒரு தைரியமும் தெம்பும் எப்போதும் இருக்கும். ஆரோக்கியமும் மேம்படும். சிரித்த முகத்துடன் ஜெயித்துக்காட்டுவீர்கள். ஆலய வழிபாடுகளிலும் ஆர்வம் பிறக்கும். புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். ராகு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். எதையும் செய்யலாமா வேண்டாமா என்று குழம்பிக்கொண்டே இருந்த நிலை மாறி சட் என முடிவெடுத்து ஒரு வேலையைச் செய்துமுடிப்பீர்கள். கௌரவம் சமூகத்தில் ஒரு படி உயரும்.
ஜன்ம குரு 30.4.24 வரை உங்கள் ராசியிலேயே தொடர்கிறார். அதுவரை உங்கள் ஆரோகியத்தில் அக்கறை காட்டுங்கள். மனத்தில் பெரிய நோய் இருப்பது போன்று சந்தேகம் வந்து விலகும். குடும்பத்திலும் வீண் விவாதங்கள் வந்துபோகும். நண்பர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம். ஆனால் 1.5.24 அன்று முதல் குருபகவான் உங்களின் தன குடும்ப வாக்குஸ்தானமாகிய ரிஷபத்தில் அடியெடுத்துவைக்கிறார். இது உங்களுக்கு ஏற்றத்தைத்தரும் குருப்பெயர்ச்சியாக அமையும். இதுவரைத் தள்ளிப்போன பணவரவு இனி அதிகரிக்கும். சொத்து சுகம் சேரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். எவ்வளவு முயன்றும் லாபம் இல்லாமல் தடுமாறிய பங்குச்சந்தை வர்த்தகம் இனி சீராகும். குழப்பங்கள் விலகும். ஆரோக்கியம் மேபடும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு அந்த வரம் கிடைக்கும். உறவினர்கள் தேடிவந்து அன்பு செலுத்துவார்கள்.
சனிபகவான் லாப வீடான கும்பத்தில் சஞ்சரிப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். வருமானம் உயரும். எதிரிகள் விலகிப்போவார்கள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் செலவுகள் குறையும். புதிய சொத்துவாங்கும் முயற்சிகள் பலன் தரும். வீட்டில் புதிய உபயோகப்பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
26.8.24 முதல் 19.9.24 வரை சுக்ரன் 6வது வீடான கன்னியில் சென்று மறைவதால் குடும்பத்தில் தேவையில்லாத கருத்து மோதல்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.
வியாபாரம்: ஓய்வின்றி உழைப்பீர்கள். அதற்கேற்ப லாபமும் அதிகமாக இருக்கும். இதுவரை பிரச்னை தந்த வேலையாட்களை மாற்றிப் புதிய திறமையான வேலையாட்களை நியமிப்பீர்கள். என்றாலும் பெரிய புதிய முதலீடுகளைச்செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை சிந்தியுங்கள். பங்குதாரர்களோடு மோதல்போக்கைக் கைவிடுங்கள்.
கமிஷன், கட்டிட உதிரி பாகங்கள், கடல் வாழ் உயிரினம், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பிரபலங்கள், நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகம் : அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும். வரவேண்டிய சலுகைகளும் வந்து சேரும். உரிமைகளைக் கேட்டுப்பெறுவீர்கள். சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். கார்த்திகை, பங்குனி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடி வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
No comments:
Post a Comment