தன்னடக்கத்தோடு பேசி காரியம் சாதிப்பவர்களான ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு இரண்டாம் வீடான மிதுனத்தில் இந்தக் குரோதி வருடம் பிறக்கிறது.
இரண்டாம் வீடு என்பது தன குடும்ப வாக்கு ஸ்தானம் என்று போற்றப்படும். எனவே சந்திரன் இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால் ஆண்டு முழுவதும் உங்களுக்கு தன வரவும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் என்று சொல்லலாம். மனதின் சின்னச் சின்ன ஆசைகள் கூட நிறைவேறாமல் தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறதே என்று கவலைப்பட்டவர்களுக்கு மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும் காலமாக இது அமையப்போகிறது. மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை வராது என்று நினைத்திருந்த பணம் கைக்குக் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். முக்கியஸ்தர்களின் அறிமுகம் உண்டு.சந்திரன்
தொல்லை கொடுக்கும் வேலையை உதறிவிட்டுப் புதிய வேலைக்கு முயன்றவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து வேலை கிடைக்கும். உறவினர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று அறிந்து கொள்வீர்கள். தொல்லை தருபவர்களிடம் இருந்து விலகி இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வீர்கள். அரசுக்காரியங்களில் இருந்த இழுபறி இந்த ஆண்டு ஆடி, ஆவணி மாதங்களில் தீரும்.
குருபகவான் ராசிக்கு 12 - ல் 30.4.24 வரை சஞ்சரிக்கிறார். இந்தக்காலகட்டத்தில் அலைச்சல் அதிகமாகும். பணம் நல்ல விஷயங்களில் செலவாகும். சிலருக்குத் தூக்கமின்மை வந்துபோகும். மனத்தில் பக்தி பெருகும். சிலர் மகான்களை சந்தித்து ஆசிபெறுவீர்கள். வீடுகட்டக் கடன் வேண்டி விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அப்ரூவல் ஆகும்.
1.5.24 முதல் உங்களுடைய ராசியிலேயே குருபகவான் வந்து அமர்வதால் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்துபோகும். அலர்ஜி இன்பெக்ஷன், வாயுக்கோளாறு ஹார்மோன் பிரச்னைகள் அதிகரிக்கும் என்பதால் உரிய மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது. பெரிய நோய் இருப்பது போன்று மன பிரம்மை தோன்றும். கவலைப்பட வேண்டாம். மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மூன்றாம் நபரை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அனைத்தையும் மனதில் போட்டுக்குழப்பிக்கொள்ள வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கடன் தவணைகள் சரியாகக் கழிகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
மன அழுத்தங்களுக்கு இடம் தர வேண்டாம். யோகா தியானம் முதலியனவற்றைப் பயிற்சி செய்யுங்கள்
சனிபகவான் தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் 10 - ம் இடத்திலேயே தொடர்வதால் உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கியிருக்கும். உங்களுக்கு வரவேண்டிய சலுகைகள் வந்துசேரும். பாராட்டும் பரிசும் கிடைக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். அரசுக்காரியங்கள் சாதகமாக முடியும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும்.
வாழ்க்கைத்துணை உரிய ஒத்துழைப்பு வழங்குவார். புதுக்காரியங்களில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த பழைய கடனைக் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கிப் பைசல் செய்வீர்கள். பதவி, பொறுப்புகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.
லாபஸ்தானமான மீனம் ராகு அமர்ந்திருப்பதால் ராஜயோகம் உண்டு, தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. உங்கள் திறமைகள் வெளிப்படும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். கேது 5 நிற்பதால் சின்னச் சின்ன சொத்துப் பிரச்னைகள் வந்தாலும் மே - 1 முதல் குருபகவான் கேதுவைப் பார்பதால் அவை உங்களுக்கு சாதகமாக அமையும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
19.9.24 முதல் 14.10.24 வரைக்கும் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசிக்கு 6 ம் வீடான துலாமில் சென்று மறைவதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை.
வியாபாரம்: சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யப் பாருங்கள். விளம்பர யுக்திகள் கைகொடுக்கும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அனுபவம் வாய்ந்த பணியாள்கள் கிடைப்பார்கள். புதியவர்களை நம்பி அறியாத தொழிலில் இறங்க வேண்டாம்.கார்த்திகை, தை, மாசி மாதங்களில் பற்று வரவு உயரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இடுவதற்கு முன்பு வழக்கறிஞரைக் கலந்தாலோசித்துச் செயல்படுங்கள். பங்குதாரர்களிடமும் நீக்குப்போகான அணுகுமுறை தேவை. முடிந்த வரை கூட்டுத்தொழிலை தவிர்ப்பது நல்லது. ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால் ஆதாயமுண்டு.
உத்தியோகம்: சனிபகவான் 10 -ல் தொடர்வதால் பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகள் பாராமுகம் காட்டினாலும் உங்கள் உழைப்பிற்கான வெகுமதி உங்களுக்கு வந்து சேரும். சிலர் உங்கள் உழைப்புக்கான பெயரைத் தட்டிப்பறிக்க முயல்வார்கள். என்பதால் கவனம் தேவை. சக ஊழியர்களில் யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது என்கிற சந்தேகம் அதிகரிக்கும். சித்திரை, ஆடி, மாசி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் சலுகைகள் கிடைக்கும்.மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு கடுமையான பணிச்சுமையைக் கொடுத்தாலும் அதற்குரிய பலன்களைக் கொடுத்து வாழ்வில் உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.
No comments:
Post a Comment