Join THAMIZHKADAL WhatsApp Groups
ஜாதிக்காய்ப்பொடி பால் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்
இரவில் ஜாதிக்காய்ப்பொடி கலந்த பால் பருகுவதால் உங்கள் உடலில் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துகிறது. இது உங்களுக்கு சிறந்த செரிமானத்தைக் கொடுக்கிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. இதன் மற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். தினமும் பருகி பலன்பெறுங்கள்.
மனதை அமைதிப்படுத்துகிறது
ஜாதிக்காயில் உள்ள மனதை அமைதிப்படுத்தும் உட்பொருட்கள் உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டையும் அமைதியாக்குகிறது. உங்களை அமைதிப்படுத்தி, உங்களை ஆழ்ந்த உறக்கத்துக்கு தயார்படுத்துகிறது.
உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது
உறங்கச்செல்லும் முன் ஜாதிக்காய் கலந்த பால் பருகுவது உங்கள் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் இரவில் ஏற்பட்டு, உங்கள் உறக்க சுழற்சியை சிறப்பாக்குகிறது.
மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை போக்கலாம்
ஜாதிக்காயில் உள்ள உட்பொருட்கள், மனஅழுத்தத்தை குறைக்கிறது. உங்களை நாள் முழுக்க மனஅமைதியுடன் வைக்கிறது. நாள் முழுக்க உங்களுக்கு ஏற்பட்ட பரபரப்பு மற்றும் பதற்றத்தை குறைக்கிறது.
செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
ஜாதிக்காய்ப்பொடி கலந்த பால் உங்கள் உடலில் செரிமானத்தை அதிகரிக்கிறது. குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஜாதிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள், உங்கள் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்களின் நினைவாற்றல் திறனை அதிகரிக்கிறது. மறதியைப் போக்குகிறது.
உறக்கமின்மை நோயை போக்குகிறது
ஜாதிக்காய்ப் பொடி கலந்த பாலை தினமும் பருகுவது உறக்கமின்மை நோயை போக்குகிறது. இது உங்கள் உறக்கத்தை முறைப்படுத்துகிறது. உங்களை அமைதிப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
ஜாதிக்காயில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயக்கத்தை அதிகரிக்கிறது. தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து உங்கள் உடலை காக்கிறது.
வீக்கத்தை குறைக்கிறது
ஜாதிக்காயில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த உடல் நலனையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஜாதிக்காய்ப் பொடி உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து, உடலில் கொழுப்பு அளவையும் குறைக்கிறது. இதனால் இதய நோய் ஆபத்து குறைகிறது.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
ஜாதிக்காய்ப்பொடி கலந்த பாலில் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், வைட்டமின்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள், உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஜாதிக்காய் பாலை தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
சூடான பால் - ஒரு டம்ளர்
ஜாதிக்காய் - சிறிது
செய்முறை
ஜாதிக்காயை ஊறவைத்து துருவி சூடான பாலில் சேர்த்து பருகலாம் அல்லது ஊறவைத்த ஜாதிக்காயை அரைத்து சேர்க்கலாம் அல்லது கடைகளில் ஜாதிக்காய் பொடி கிடைக்கும். அதில் சாப்பிடுவதற்கு ஏதுவான ஜாதிக்காய் பொடியை வாங்கி அதில் அரை ஸ்பூன் சூடான பாலில் கலந்து பருகலாம்.
இந்தப்பாலை பருகும்போது, இதனுடன் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் அல்லது சேர்க்காமலும் பருகலாம். சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் எதுவும் சேர்க்காமல்தான் பருகவேண்டும். ஜாதிக்காயில் உள்ள சுவையே இந்த பாலின் சுவையை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment