Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 21, 2024

மாரடைப்பு, பக்கவாதம், குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் திறன் இந்த விதையில் உள்ளது.

முழு புரதம் நிறைந்தது

ஹார்வேர்ட் ஹெல்த் கூற்றுப்படி சியா விதைகள் முழு புரதச்சத்துக்கள் நிறைந்தது. இதில் உடலுக்கும் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன.

இவற்றை உடல் உருவாக்க முடியாது. இந்த அமினோ அமிலங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை.

உடலில் நோய் எதிர்ப்பை உருவாக்குபவை. பால், முட்டை, மீன், இறைச்சி, கோழி, கோதுமை மற்றும் குயினோவாவிலும் புரதச்சத்துக்கள் உள்ளது. நீங்கள் எந்த உணவில் சேர்த்து சாப்பிட்டாலும் சியா விதைகளில் இருந்து 5 கிராம் புரதம் கிடைத்துவிடும்.

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

சியா விதைகளில், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. தண்ணீரில் கலந்து பருகினால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பவை சியா விதைகள்.

மலச்சிக்கலை போக்கும். நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு நம் குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்களை வளர்த்து குடல் ஆரோக்கியத்தை பெருக்குகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் நிறைந்தது

சியா விதைகளில் உள்ள மற்றொரு ஆரோக்கிய நன்மை, இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் நிறைந்தது. இதில் காஃபைக் அமிலம், மைரிசிடின், குயிர்சிட்டின், ரோஸ்மெரினிக் அமிலம் ஆகியவை அடங்கியது.

ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து செல்களை பாதுகாப்பது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான். அவைதான் புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை. இதில் உள்ள பாலிஃபினால்கள், உங்களை ஆரோக்கியத்துடன் வைத்து, பல்வேறு நோய்களை தடுக்கிறது.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்தது

சியா விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. அவை வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. மேலும், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ட்ரைகிளிசரைட் அளவுகள், மாரடைப்பை தடுக்கிறது.

பக்கவாத பாதிப்புக்களை குறைக்கிறது. ஆர்த்ரிட்டிஸ், சரும நோய்கள் ஆகியவற்றை ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் குறைக்கிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது.

இதயத்துக்கு நன்மை தரும் கொழுப்புகள்

சியா விதைகளில் இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. ஒருமுறை சியா விதைகளை சாப்பிட்டால் அதிலிருந்து 9 கிராம் கொழுப்பு கிடைக்கும். அதில் 8 கிராம் இதயத்துக்கு நன்மை தருவது.

மினரல்கள் நிறைந்தது

சியா விதைகளில் எண்ணற்ற மினரல்கள் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் சிங்க் ஆகிய சத்துக்கள் உள்ளன. கால்சியம் மற்றும் மெக்னீசிய சத்துக்கள் ஆரோக்கியமான எலும்புகளுக்கு உதவுகிறது.

சிங்க் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்புக்கும் உதவுகிறது. இதை உங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு பயன்பெறுங்கள்.

கலோரிகள் குறைவானது

சியா விதைகளில் கலோரிகள் குறைவாக இருக்கும். ஒரு ஸ்பூன் விதையில் 138 கலோரிகள் உள்ளது. இது நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இதை கலோரிகள் குறைந்த உணவில் சேர்த்து சாப்பிடும்போது உங்களுக்கு நீண்டநேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது.

கொழுப்பை குறைக்கிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

சியா விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் கரையக்கூடியவை. இதுதான் இந்த விதைகளில் ஏற்படும் பிசுபிசுப்புத்தன்மைக்கு காரணமாகின்றன. இந்த நார்ச்சத்துக்கள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன.

செரிமானத்தை தாமதமாக்குகிறது, இதனால் சாப்பிட்டவுடன் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை உயர்வைக் தடுக்கிறது. இதனால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

சியா விதைகளில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை, எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியவை. இவை எலும்பு அடர்த்தி மற்றும் எலும்பு வலுவடைய உதவுகிறது.

குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது

நாள்பட்ட நோய்களான இதய நோய், நீரிழிவு மற்றும் சில வகை புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் சியா விதைகள் பாதுகாப்பு அளிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News