தலை பாரம், நீரேற்றம் குணமாக: கிராம்பை நீர் விட்டு மை போல அரைத்து நெற்றியிலும், மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலை பாரம், நீரேற்றம் குணமாகும்.
தலை பாரம், நீரேற்றம் குணமாக: கரிசாலைச் சாறு துளியுடன், துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
தலை பாரம், நீரேற்றம் குணமாக: நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
தலைச்சுற்றல், மயக்கம்: சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்
தலைவலி: தலைவலி சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துப் பருக உடனே குணமாகும்.
தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தலைவலி: அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
தழும்பு மறைய: வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
தாது பலம்: சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.
தாய்ப்பால் சுரக்க : கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
தீச்சுட்ட புண்களுக்கு: வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
தீச்சுட்ட புண்களுக்கு: வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
தும்மல் நிற்க : தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.
துளசி பொடி: - மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
தூதுவளை பொடி: - நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
தேக ஊறலுக்கு : கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
தேக பலமுண்டாக: நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
தேமல் மறைய : வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்
தேள்கடி: தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
தொடர் விக்கல்: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
தொண்டை கட்டு: தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.
தொண்டை கம்மல் தீர : கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
தொண்டை கரகரப்பு: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொண்டை நோய்க்கு: கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
தொண்டை புண்ணிற்கு: நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
தொண்டைப்புண்: தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்பட்டுவோருக்குப் பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சிறிது சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியன உதவும். மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியாக்கிப்போட்டு விட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு, தளதளவென்று கொதிக்க விட்டு, இறக்கிய கஷாயத்தில் சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால், தொண்டையைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் நீங்கி விடும்.
தோலில் ஊறல், தடுப்பு : ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
நகச்சுற்று குணமாக: கடுகு, மஞ்சள், ஓமம் முதலியவற்றை அரைத்து, நகச்சுற்றின் மேல் கட்டினால் வலி குறையும்.
நகச்சுற்று குணமாக: வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்
நரம்பு தளர்ச்சி நீங்க : மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரழிவுநோய், பெருந்தீனி, இரத்த அழுத்தம், தவறான வழியில் சக்தியை வீணாக்குதல், குடும்பப்பளு, சத்தான உணவை உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது.
நரம்பு தளர்ச்சி நீங்க : தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்
நரம்பு தளர்ச்சி நீங்க : அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.
நன்றாக உறங்க வேண்டும் மன அளவிலும் உடல் அளவிலும் உடலைப் பேணிக் காக்க வேண்டும். உறங்குவதற்குமுன் அதிக நீரைப் பருக வேண்டும். தூங்கும்முன் சூடான பானம் எதுவும் அருந்தக்கூடாது.
நன்கு பசி எடுக்க: வாகை மரத்தின் பட்டைகளை நிழலில் உலர்த்தி, தூளாக்கி வைத்துக் கொண்டு, பாலில் கலந்து பருகிவர, பசியின்மை பாதிப்புகள் விலகி, நன்கு பசி எடுக்கும்.
நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.
நீர்க்கடுப்பு எரிவு தீர: எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
நீர்த்துவார எரிவு தீர: வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
நீரழிவு நோயாளிகளுக்கு : வெங்காயம் அருமருந்து. காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. வெங்காயத்தின் விஞ்ஞானப் பெயர் 'ஆலியம்சிபா.'
நீரழிவு நோயாளிகளுக்கு: தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4 to 8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
நெஞ்சுவலி : நெஞ்சுவலி வந்தவுடன் ஒரு கரண்டி சுத்தமான தேன் உட்கொள்ள, வலி வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
நெருப்பு சுட்ட புண்ணிற்கு: வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
நெல்லிக்காய்: நெல்லிக்கனியில் வைட்டமின் 'சி சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்தைவிட இவற்றில் சுமார் 25மடங்கு வைட்டமின் 'சி' சத்து நிறைந்து உள்ளது. இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட், புரதச் சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல் தொடர்பான வியாதிகள், எலும்பு, தாடை, மலச்சிக்கல், நீர்த்தாரையில் உள்ள புண் போன்றவற்றைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம். அதே போல் மூளைக்கோளாறு, இதய நோய், காசநோய், ஆஸ்துமா, நீரழிவு போன்ற நோய்களைக் குணமாக்குவதில் இதன் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும்.
நெறிகட்டிகள் மறைந்துவிட: வாகை மரத்தின் விதைகள் சிறிது எடுத்துக் கொண்டு, மிளகுத்தூளுடன் கலந்து இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி, ஒரு தம்ளராக நீர் சுண்டியபின், ஆற வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, பாதிப்புகள் தரும் கழுத்து, இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் வலியைத் தந்துவந்த நெறிகட்டிகள் மறைந்துவிடும்.
நோய் எதிர்ப்பு சக்தி: கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துக்கள், என்சைம்கள், புரோட்டீன்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங்களுடைய உபபொருட்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை என்பது உடலில் எனர்ஜி அதிகரிக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது. அதனால்தான் மூளையில் ரத்தம் உறைந்த நிலையிலும் இதைப் பயன் படுத்துகின்றனர். ஆங்கில மருந்துகளிலும் இதன் பயன்பாடு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர்போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, ஜீரண சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்குக் கற்றாழை நல்ல பயன் தருகின்றது. தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான்.
No comments:
Post a Comment