தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கற்றாழை ஜூஸ் செய்வது குறித்து இஞ்சுக்கு கண்போம்.
தேவையான பொருட்கள்:-
கற்றாழை
மல்லித்தழை
இந்துப்பு
செய்முறை:-
கற்றாழையை கழுவி தோல் சீவி உள்ளே உள்ள ஜெல்லி போன்ற பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை தண்ணீரில் 5 முறை கழுவிட்டு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை வடிகட்டி, உப்பு சேர்த்து தினமும் பருகினால், உங்கள் உடல் ஆரோக்கியம், தலைமுடி ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியம் என்று தலை முதல் பாதம் வரை அனைத்தும் மேம்படும்.
No comments:
Post a Comment