Join THAMIZHKADAL WhatsApp Groups
மெட்டா நிறுவனம் இன்று மெட்டா ஏ.ஐயின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இது நிறுவனத்தின் மேம்பட்ட large language model லாமா 3 மூலம் இயக்கப்படுகிறது.
புதிய மேம்படுத்தப்பட்ட Meta AI ஆனது மெட்டா ஆப்ஸ் முழுவதும் பயனர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்டாவின் சொந்த ஆப்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் தளங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த புதிய மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ மூலம் ஏ.ஐ இமேஜ் மற்றும் டெக்ஸ்ட் ஏ.ஐ பயன்படுத்தலாம். புதிய அப்டேட் மூலம், Meta AI இல் படத்தை உருவாக்குவதையும் வேகமாக செய்கிறது. அதன் புதிய "Imagine" அம்சம் பயனர்கள் நிகழ்நேரத்தில் உரை விளக்கங்களிலிருந்து படங்களை உருவாக்க அனுமதிக்கிறது.
"நீங்கள் டெக்ஸ்ட் செய்யத் தொடங்கும் போது ஒரு படம் தோன்றுவதைக் காண்பீர்கள் - மேலும் ஒவ்வொரு சில எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் போதும் அது மாறும், எனவே Meta AI உங்கள் பார்வையை உயிர்ப்பிப்பதை நீங்கள் பார்க்கலாம்" என்று அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment