Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 17, 2024

தேர்தல் பணிக்கு செல்ல இருக்கும் மதிப்பிற்குரிய அரசூழியர், ஆசிரியர்களே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

நீங்கள் செல்லும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அப்பள்ளி ஆசிரியர்கள், அப்பள்ளியின் உட்புற வெளிப்புற சுவரிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் பல வண்ண ஓவியங்களும், பாடத்தொடர்புடைய படைப்புகளும் கற்றல் சார்ந்த ஓவியங்களும் வரையப்பட்டிருக்கும் எழுதப்பட்டிருக்கும்

அவற்றின் மீது வேட்பாளர்களின் சின்னங்களை பசைகொண்டு ஒட்டி அவர்களின் உழைப்பை பாழாக்கி விடாதீர்கள். 

மாறாக செல்லோடேப் கொண்டோ அல்லது எதுவும் எழுதப்படாத பகுதியில் அதை ஒட்டுங்கள்

ஒருநாள் தானே நமக்கென்ன என்று அந்த உழைப்பில் ஒட்டி அதை சிதைக்க வேண்டாம். ஏனெனில் அதை உருவாக்க அவர்கள் எத்தனை நாள் கஷ்டப்பட்டிருப்பர் என்று அவர்கள் இடத்தில் இருந்து சிந்தித்து அந்த வகுப்பறையை வாக்குச்சாவடியாக மட்டும் பார்க்காமல் அதில் உள்ள உழைப்பை பார்ப்போம்

இதுபோல் இன்று எத்தனையோ பள்ளிகள் வண்ணமயமாக அந்த பள்ளி ஆசிரியர் களால் ஜொலித்துக்கொண்டு இருக்கிறது, அதை சிதைத்துவிடாதீர்கள் இது அனைவரின் அன்பு வேண்டுகோள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News