Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதார் அட்டை மிக முக்கிய அடையாள அட்டையாகும். பாஸ்போர்ட் பெறுவது முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பது அவசியம் ஆகிறது. குறிப்பாக அரசின் சலுகைகளைப் பெற வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பது அவசியம் ஆகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இன்டர்நெட் பேங்கிங் மூலம் இணைப்பு
1. முதலில் உங்கள் இன்டர்நெட் பேங்கிங் லாக்கின் செய்யவும்.
2. லாக்கின் செய்தபின் Link Aadhaar என்ற ஆப்ஷனை தேடவும்.
3. அதன் பின் உங்கள் ஆதார் நம்பர் உள்ளிடவும்.
4. இப்போது வங்கி இதை ப்ராசஸ் செய்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கும்.
மொபைல் ஆப் மூலம் இணைப்பு
மொபைல் ஆப் மூலம் இணைப்பதும் எளிது தான். இதை செய்ய,
1. முதலில் உங்கள் வங்கி மொபைல் ஆப் டவுன்லோடு செய்து லாக்கின் செய்யவும்.
2. இங்கு ஆதார் இணைப்பு ஆப்ஷனை தேடவும்.
3. அதன் பின் உங்கள் ஆதார் நம்பர் உள்ளிட்டு Confirm செய்யவும்.
4. இப்போது வங்கி தரப்பில் உங்கள் Request ப்ராசஸ் செய்யப்படும்.
No comments:
Post a Comment