உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை உள்ளது கோவைக்காய். அத்துடன் அது உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது.
அதற்கேற்ற பக்டீரியா எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது.
கோவைக்காய் உடலில் உள்ள அதிகபட்ச சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. தேவையற்ற உணவுப் பழக்கங்களால், வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தனிக்கும் தன்மை கொண்டது. பழமையான ஆயுர்வேத மருத்துவ நூல்களில் கோவைக்காயில் உள்ள சிறப்பு அம்சங்களை நம்து உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவக்காயில் உள்ள பீடா கரோடின் என்னும் சத்தானது இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது. கோவக்காஇல் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளன.
கோவைக்காயில் உள்ள மெட்டபாலிக் தன்மைகள் நமது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வுத் தன்மையை நீக்க அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சோர்வைப் போக்கவும், தரப்படுகிறது.
கோவக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. அல்சர் உள்ளவர்களுக்கு இது நல்ல பலனை கொடுக்கும். கால்சியம் மற்றும் இதர மினரல்களால் உருவாகும் சிறுநீரக கற்கள் சிறுநீரக பாதையில் தங்கிவிடும். கோவக்காயில் உள்ள ஆரோக்கியமான கால்சியம் சத்து இந்த சிறுநீரக கற்களை தடுக்கக் கூடியது. கோவக்காய் இலைகள் மற்றும் தண்டுகளை பேஸ்ட் போல அரைத்து சருமத்தில் தடவினால் அலர்ஜிகள் குணமாகும். கோவக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் சத்துக்கள் மற்றும் பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் உண்டாகுவதை தடுக்கும். கோவக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
ஆயுர்வேதத்தில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவக்காயை பயன்படுத்துகின்றனர். இந்தக் கொடியின் தண்டுகள் மற்றும் இலைகளை பறித்து சூப் வைத்து அருந்தலாம். கோவக்காய் இலைகளை பச்சையாக சாப்பிட்டால் குளுக்கோஸ் சகிப்புணர்வு அதிகரிக்குமாம். வாரம் ஓரிரு நாட்கள் இதை உங்கள் உணவில் சேர்த்து வர சர்க்கரை கட்டுக்குள் வரும்.
உடல் பருமனை தடுப்பதற்கான பண்புகள் கோவக்காயில் உள்ளன. உடலில் கொழுப்பு செல்கள் உருவாகுவதை இது தடுக்கும். அதேபோல மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலக்கட்டு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
நம் உடல் இயக்கத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் ரத்தச்சோகை மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, ஆரோக்கியத்தை தக்க வைக்க கோவக்காய் உதவுகிறது.
எடையிழப்பு போன்ற ஊட்டச் சத்து குறைபாட்டால், ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அளிக்கப்படுகிறது. இது எக்ஸிமா எனப்படும் சருமப் பிரச்சினையைக் குணப்படுத்த மருந்தாக அளிக்கப்படுகிறது.
வாய்ப் புண்ணை - குறிப்பாக நாக்கில் ஏற்படும் புண்களை குணப்படுத்த இது உதவுகிறது.
எடை குறைக்க விரும்புவோருக்கு உணவுடன் சாப்பிட ஏற்ற மிகச் சிறந்த காய் இதுவே. கோவைக்காயை மூலப் பொருளாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள், அதன் செடியிலிருந்து பெறப்பட்ட சாறுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
No comments:
Post a Comment