பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முடியை அழகாகவும் ஆரோக்கியமாகவும் நீளமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் ஒரு சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்களது முடியானது வெள்ளையாக இருந்தால் வருத்தம் ஏற்படும்.
இதற்காக சந்தையில் விற்கப்படும் ஒரு சில பொருட்களை வாங்கி பயன்படுத்தி வெள்ளையான முடியை கருமையாக மாற்றிக்கொள்வார்கள். ஆனால் நிரந்தர தீர்வை எப்போதும் வழங்குவதில்லை.
இயற்கையான முறையில் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் இந்த 2 பொருட்களை வைத்து செய்து பார்க்கலாமே.
கொய்யா இலைகளை பயன்படுத்துவது எப்படி?
சில கொய்யா இலைகளை முதலில் கழுவி பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும். அடுத்து சின்ன வெங்காயத்தை எடுத்து பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும். அடுத்து வெங்காயச் சாற்றில் கொய்யா இலை பேஸ்ட் மற்றும் தேங்காய் எண்ணெயைக் கலந்து, தலைமுடியில் தடவி அரை மணிநேரத்திற்கு பின் கழுவவும்.
கொய்யா இலைகளைக் கழுவி, தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து தலைமுடியில் தடவி 40 நிமிடத்திற்கு அப்படியே விடவும். பின் சாதாரண நீரில் கழுவவும்.
கொய்யா இலைகளை கழுவி ஒரு லிட்டர் தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பின் ஆறவைத்து, வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கவும். இதை தினமும் முடிவேரில் தடவி 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும்.
No comments:
Post a Comment