Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 3, 2024

மொபைலில் பணம் செலுத்தலாம் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் டிக்கெட்களை யுபிஐ மூலம் ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக ரயில் சேவையை இந்தியன் ரயில்வே வழங்குகிறது. ரயில்களில் பயணம் மேற்கொள்வோர் பெரும்பாலும் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிப்பர். கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிடுபவர்கள், முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் கிடைக்காதவர்கள், முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்பர்.

இந்தியன் ரயில்வேயை பொறுத்தவரை முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்கும் வசதி பல ஆண்டுகளாக இருக்கிறது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க ரயில் நிலையங்களுக்கு வந்து தான் டிக்கெட் பெற வேண்டும். மேலும் முன்பதிவு இல்லாத டிக்கெட்களை யுடிஎஸ் செயலி மூலம் ஆன்லைனில் எடுக்கலாம். ஆனால், முன்பதிவு இல்லாத டிக்கெட்களை கவுண்டரில் எடுத்தால் பணத்தை மட்டுமே கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது, அங்கே யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியாது.

இதனால், சில்லரை பிரச்னை தொடங்கி பல விஷயங்கள் இருந்தது. எனவே, அங்கேயும் யுபிஐ வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. இந்தியன் ரயில்வே பயணிகள் வசதியை மேம்படுத்த பல்வேறு வசதிகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் தான் நேற்று முதல் ரயில் நிலையங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இனி ரயில் நிலையங்களில் சென்று டிக்கெட் எடுத்தால் கண்டிப்பாக ரொக்கமாகப் பணம் தர வேண்டும் என்று அவசியம் இல்லை. யுபிஐ மூலம் மொபைலில் இருந்தே அனுப்பிவிடலாம். இதன் மூலம் பிரச்னை இல்லாமல் மிக எளிதாக டிக்கெட் எடுக்கலாம். ரயில் நிலையங்களில் யுபிஐ வசதி வேண்டும் என்று நீண்ட காலமாக பயணிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், ஒரு வழியாக இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News