துலாக்கோல்போல் விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் சமமாக நடத்தும் துலாம் ராசிக்காரர்களே...
உங்களுக்கு இந்தக் குரோதி வருடம் எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.ராசிக்கு 9 - ம் வீடான மிதுனத்தில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் முன்னேற்றம் உண்டு. பிரச்னைகளைப் புதுமையான முறையில் அணுகி வெற்றிகாண்பீர்கள். அவநம்பிக்கைகள் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனத்தில் சாதிக்கும் எண்ணம் உருவாகும். பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். முக்கியஸ்தர்கள் அறிமுகமாவார்கள். சமூகத்தில் புதுப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு மனை வாங்கும் யோகம் உண்டு.
ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று இருக்கும் வேளையில் இந்த ஆண்டு பிறப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். 6 -ல் வீட்டில் மறைந்திருப்பதால் சின்னச் சின்ன ஆரோக்கியப் பிரச்னைகளும் வர வாய்ப்புண்டு.
சனி பகவான் 5 -ம் இடமான கும்பத்தில் அமர்ந்திருப்பதால் சிலநேரங்களில் குழப்பமும், தடுமாற்றமும் ஏற்படும். சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றிபெறலாம். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் விட்டுக்கொடுத்துப் பழகுங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். கர்ப்பிணிகள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சாலைகளைக் கடக்கும்போது நிதானம் தேவை. மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
30.4.24 வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்துவருவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
1.5.24 முதல் குருபகவான் ரிஷபத்தில் பெயர்ச்சியாகி அஷ்டம குருவாக சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாக உணர்வீர்கள். செலவுகளும் கட்டுக்கடங்காமல் போகும். வேலைகள் இழுபறியாகி முடியும்.
தேவையற்ற எதிர்மறை எண்ணங்களுக்கும் தேவையற்ற பழக்கங்களுக்கும் ஆளாக வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். முன்கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. அரசுக் காரியங்களில் கவனத்துடன் செயல்படுங்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளை முறையாகச் செலுத்தி விடுங்கள்.
ராகுபகவான் ராசிக்கு 6 - ம் வீட்டில் தொடர்ந்து சஞ்சாரம் செய்வதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். எதிரிகளும் நண்பர்களாவார்கள். புதிய பதவிகள் தேடிவர வாய்ப்புண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அந்த வரம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். பங்குச்சந்தை லாபம் தரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புவரும்.
கேது ராசிக்கு 12 - ல் மறைந்திருப்பதால் அனுபவப் பாடங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்களின் உண்மையான முகத்தைக் கண்டு தெளிவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். செலவுகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் சிக்கனம் தேவை.
14.4.24 முதல் 25.4.24 வரை மற்றும் 28.1.25 முதல் 13.4.25 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறுசிறு வாகன விபத்துகளும் ஏற்படலாம். மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களையெல்லாம் கவனமாகக் கையாளுங்கள்.
11.7.2024 முதல் 26.8.2024 வரை செவ்வாய் 8-ல் மறைவதால் சகோதரர்களிடையே தேவையற்ற சச்சரவுகள் தோன்றி மறையும். சக்தி மீறி எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
வியாபாரம்: வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பற்று வரவு அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளைக் கற்றுக் கொள்வார்கள். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், அழகு சாதனப் பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும். மதிப்புக் கூடும்.
உத்தியோகம்: சமயோஜித புத்தியால் அலுவலகத்தில் இருக்கும் பிரச்னையை சமாளித்து வெற்றிபெறுவீர்கள். என்றாலும் பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.
No comments:
Post a Comment