Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒருவருக்கு மலச்சிக்கல் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை உண்பது, நார்ச்சத்து இல்லாத உணவுகளை உண்பது, போதுமான அளவு நீரை அருந்தாமல் இருப்பது, அதிக மன அழுத்தத்தில் இருப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பது, அதிக உடல் சூடு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
குறிப்பாக கோடையில் ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது என்றால், அதற்கு முதன்மையான காரணம் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது தான். எனவே நீரை அதிகம் அருந்த வேண்டும்.
இது தவிர ஒருசில பானங்களும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். இப்போது கோடையில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி தீர்வளிக்கும் இயற்கை பானங்களைக் காண்போம். இந்த பானங்களை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கலைத் தடுக்கலாம்.
1. வெல்ல நீர்
நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவீர்களா? அதற்கு இயற்கை வழியில் தீர்வு காண விரும்பினால், வெல்ல நீர் பெரிதும் உதவி புரியும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும். இதனால் வெல்லத்தில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், குடலியக்கத்தை சீராக்கி, காலையில் எழுந்ததும் சிரமமின்றி மலம் வெளியேற உதவி புரியும். வேண்டுமானால் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.
2. எலுமிச்சை ஜூஸ்
மலச்சிக்கல் பிரச்சனையை அதிகம் சந்திப்பீர்களா? அப்படியானால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தயாரித்த எலுமிச்சை ஜூஸை குடியுங்கள். இப்படி செய்வதன் மூலம், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராவதோடு, உடலில் இருந்து நச்சுக்களும் உடனே சிரமமின்றி வெளியேற்றப்படும்.
3. ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிளில் டயட்டரி நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த வகை நார்ச்சத்து ஆரோக்கியமான குடலியக்கத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் ஆப்பிளை தோலோடு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக கிடைத்து, மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
4. பேக்கிங் சோடா நீர்
பேக்கிங் சோடா நீர் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. அதுவும் ஒரு டம்ளர் நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடித்து வந்தால், மலச்சிக்கல், வாய்வு தொல்லை மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒருமுறை முயற்சித்து பாருங்ள்.
5. விளக்கெண்ணெய்
பழங்காலம் முதலாக நம் முன்னோர்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு மேற்கொண்டு வந்த ஒரு வைத்தியம் தான் விளக்கெண்ணெய் சாப்பிடுவது. விளக்கெண்ணெயில் மலமிளக்கும் பண்புகள் உள்ளன. இது குடலியக்கத்தை சீராக்குவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை இரவு தூங்கும் முன் அல்லது காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால் மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
6. திரிபலா பானம்
ஆயுர்வேத மருத்துவத்தில் திரிபலா பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட திரிபலா பொடியை 2 டீஸ்பூன் எடுத்து 1 டம்ளர் நீரில் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால், மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
No comments:
Post a Comment