மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது Chat suggestions என்ற புதிய அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இது ஒரு இன்ட்ரஸ்டிங் அம்சமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, உங்கள் வாட்ஸ்அப் Contacts உள்ள நண்பர், உறவினர்களிடம் நீண்ட நாள் ஷேட், கால் செய்யலாம் இருந்தால் இந்த புதிய அம்சம் மூலம் உங்கள் suggestion-ல் காண்பிக்கப்படும். அதை அறிந்து நீங்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசலாம். ஷேட் அல்லது கால் செய்து மகிழலாம். இது தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஐபோன், ஆண்ட்ராய்டு இரு பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இது பயனர் அனுபவத்தையும், communication experience-யும் மேம்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment