Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 11, 2024

எடைகுறைப்பு, வலி நிவாரணம்..! ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கும் பெருங்காய தண்ணீர்

உங்கள் வீட்டு அஞ்சறை பெட்டியில் தவறாமல் இடம்பெறும் பொருளாக பெருங்காயம் உள்ளது. கூட்டு பொறியல் முதல் குழம்பு வரை என நீங்கள் சமைக்கும் எந்த உணவாக இருந்தாலும் அதில் சிறிய அளவு பெருங்காயம் சேர்த்தால் அதன் ருசி மற்றும் மனம் கூடுதலாகும்.

சிறிய அளவு பயண்பாடாக இருந்தாலும் நிறைவான உணர்வை தரும் இந்த பெருங்காயத்தை நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீரற்ற தாவரத்தின் சாறாக இருக்கும் பெருங்காயம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் உணவில் ருசி மட்டுமில்லாமல் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.

முதலில் பெருங்காயம் நீரில் கலந்து குடிப்பது எப்படி என பார்க்கலாம்

வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொண்டு, பெருங்காயத்தில் நான்கில் ஒரு பகுதியை சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றை நன்றாக கலக்கி விட்டு வெறுவயிற்றில் இந்த பெருங்காய நீரை பருக வேண்டும். இந்த நீரில் தேவைப்பட்டால் மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு கூடுதல் டோஸ் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிடைப்பதோடு, எடை குறைப்பும் விரைவாக நடைபெறும்.

பெருங்காயம் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

எடைகுறைப்பு

பெருங்காய நீர் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இவை விரைவாக நடப்பதன் விளைவாக எடைகுறைப்பு நிகழ்கிறது. ஏனெனன்றால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகமாக நிகழும்போது உணவை விரைவாக செரிமானம் அடைகிறது. நாம் சாப்பிடும் உணவு நல்ல விதமாக செரிமானம் அடைந்தாலே எடைகுறைப்புக்கு எளிதாகும்.

சருமம் பளபளப்பாகும்

வயதானால் ஏற்படும் சுருக்கங்கள் தவிர்க்கப்பட்டு நாள்தோறும் பெருங்காயம் கலந்த தண்ணீர் குடிப்பதால் உங்கள் சருமங்கள் பளபளப்பாகும். இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமங்களில் எந்த சேதமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. அத்துடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதன் மூலம் சருமங்களில் ஏற்படும் சிதைவைத் தடுக்கிறது.

சளி மற்றும் இருமலுக்கு நிவாரணி

பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக பெருங்காயம் கலந்த நீரை பருகலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சளி ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன், சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும் இருமல், மூக்கில் சளி வடிதல், அதிகப்படியான சளி போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

மாதவிலக்கு வலிக்கான நிவாரணம்

பெண்களுக்கு மாதவிலக்கு நாள்களில் ஏற்படும் அதீத வலியை குறைப்பதற்கான அருமருந்தாக பெருங்காயம் கலந்த நீர் உள்ளது. மற்ற மருந்துகளைக் காட்டிலும் மிகவும் விரைவாக மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் பிடிப்புகள், வலியை உடனடியாக நீக்க வல்லமை பெருங்காய நீருக்கு உண்டு.

குடல் அழற்சி நோய் அபாயத்தை குறைக்கிறது

பெருங்காயம் கலந்த நீர் மிருதுவான செரிமானத்துக்கு வழி வகுக்கிறது. செரிமான அமைப்பில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. இதனால் அவற்றின் செயல்பாட்டை இயல்பாக்குவதோடு, குடல் அழற்சி நோய் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News