Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 2, 2024

சிறப்பு படிகள் பெற தணிக்கை தடை - பெற்ற பணத்தை திரும்ப செலுத்த உத்தரவு ( ஆசிரியர்கள் பட்டியல் இணைப்பு...)

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


காஞ்சிபுரம் ஒன்றியத்தில் கல்வி துறை தணிக்கை அறிக்கை...

“ அரசு ஆணை எண் .303 ஊதியக்குழு நாள் 11.10.2017 ன்படி 01.01.2016 முதல் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் தனி ஊதியங்கள் மாற்றியமைக்கப்பட்டு 01.01.2016 முதல் கருத்தியலாகவும் 01.10.2017 முதல் பணப்பலனும் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு ஆணை எண் .304 ஊதியக்குழு நாள் 13.10.2017 மற்றும் அரசு ஆணை எண் , 306 ஊதியக்குழு நாள் 13.10.2017 ஆகிய அரசாணைகளில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு திருத்தப்பட்ட சிறப்பு படிகள் மற்றும் இதர படிகள் வழங்கி ஆணையிடப்பட்டு 01.10.2017 முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேற்காணும் அரசாணையில் தெரிவிக்கப்படாத சிறப்பு படிகள் ரூ .500 / - மற்றும் ரூ .30 / - 01.10.2017 முதல் பெற்று வழங்கப்பட்டு வருவது தணிக்கை தடையாகிறது.

எனவே 01.10.2017 முதல் வழங்கப்பட்ட இணைப்பில் கண்டுள்ளவாறு கணக்கிடப்பட்ட ரூ .34,90,240 / - பிடித்தம் செய்யப்பட்டு அரசு கணக்கில் திரும்ப செலுத்தி அதன் விவரம் தணிக்கைக்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் . " எனவே , இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் அவர்களின் பெயருக்கெதிரே தெரிவிக்கப்பட்டுள்ள தொகையினை IFHRMS மென்பொருள் மூலமாக தங்களது Login வழியாக E - Challan மூலமாக செலுத்தி , செலுத்து சீட்டின் மூன்று நகல்களை 15.04.2024 க்குள் இவ்வலுவகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு- ஆசிரியர் பெயர் பட்டியல்👇👇👇

Special Allowance stop trs list - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News