Join THAMIZHKADAL WhatsApp Groups
காகத்தை வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்று தொட்டு ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. காகம் சனி பகவானின் மற்றொரு உருவமாக பார்க்கப்படுவது வழக்கம் .
அந்த வகையில் காகத்தை பற்றி அச்சங்கள் சகுனம் என்பதனை கடைபிடிப்பவர்கள் மத்தியில் நிலவி வருகிறது. எல்லோரும் இதை கடைபிடிப்பதில்லை. காகம் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்தால் அது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சாஸ்திரப்படி குறிப்பிடுகிறது. காகம் வீட்டில் தெற்கு பக்கத்தில் அமர்ந்து இருந்தால் குடும்பத்தின் முன்னோர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்பதை குறிக்கிறதாம்.
வீட்டின் கூரையில் வைத்திருக்கும் தண்ணீரை காகம் குடித்தால் விரைவில் பணக்காரராக போகிறோம் என்பதற்கான யோகம் அமையும் என்று கூறப்படுகிறது. சுப காரியங்களுக்கு செல்லும்போது வீட்டின் மேற்கு நோக்கி காகங்கள் பரப்பதை கண்டால் வெற்றி கிடைக்கப் போகிறது என்பதன் அறிகுறியாம். காலை நேரத்தில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி காகம் பறந்தால் விருந்தினர்கள் வரக்கூடும். நிறைய காகங்கள் ஒன்றாக கத்தினால் குடும்பத்திற்கு பெரிய நெருக்கடி அல்லது ஆபத்து ஏற்பட போவதை உணர்த்தும் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment