Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 15, 2024

ITK தன்னார்வலர்கள் மாதிரிப் பள்ளி தூதுவர்களாக நியமனம்!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மாதிரிப் பள்ளி தூதுவர்கள்

மாதிரிப் பள்ளிகள் என்பவை தமிழ்நாடு அரசு நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகள். இங்கு சிறந்த பயிற்சி அளித்து மாணவர்களை முக்கியமான கல்வி நிறுவனங்களில் சேர பல பயிற்சிகள் வழங்கப்படும்‌. கடந்த ஆண்டு ஐஐடி, என்ஐடி, உள்ளிட்ட நாட்டின் முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களில் 247 மாணவர்கள் சேர்ந்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்கள் ஐஐடியில் சேர்ந்துள்ளது அண்மைக்கால வரலாற்றில் இதுவே முதல் முறை. அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நனவாக்கும் இந்த மாதிரிப் பள்ளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நல்ல ஊக்கமுடைய தன்னார்வலர்கள் 3000 பேர் தேவை என்று மாதிரிப் பள்ளிகள் செயலகத்தில் இருந்து கோரப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு 5-6 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தன்னார்வலர்கள் பணி:

அரசுப் பள்ளிகளில் படிக்கும்‌ 9, 10 மாணவர்களின் விவரம் தரப்படும்.‌ இவர்களின் பெற்றோரைச் சந்தித்து மாதிரிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும்.‌

இவர்களுக்கு மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து முறையான பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின்பு அவர்கள் பெற்றோர்களை சந்திக்கும் வகையில் செயல்பாடுகள் அமையும்.

தன்னார்வலர்கள் தகுதி:

பெற்றோர்களிடம் பேசி மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஊக்கமூட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகனம் இருந்தால் நலம். இல்லாவிட்டால், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

இவர்களுடைய பணியானது +2 தேர்வு முடிவுகள் வெளியானதும் தொடங்கும்.

இப்பணியானது குறுகிய காலத்தை கொண்டதாக அமையும்..

( கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்குவது தொடங்கும் காலம் வரை இருக்கலாம்) இவர்களுக்கு போக்குவரத்து பயணப்படி வழங்குவதாக தெரிகிறது.

சிறப்பு ஊதியம் வழங்குவது சம்பந்தமாக எவ்வித முடிவும் தற்போது வரை தெரிய வரவில்லை. இருப்பினும் வழங்கலாம் என்ற முடிவும் உள்ளது.

மாணவர்கள் நலன் கருதி செயல்படும் இத்திட்டத்திற்கு நன்கு ஆர்வமுள்ள மற்றும் இதனை சிறப்பாக கொண்டு செல்லக்கூடிய திறனுள்ள தன்னார்வலர்கள் தங்களது ஒன்றிய ஒருங்கிணைப்பாளரை தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News