JEE என்பது மிக முக்கியமான பொறியியல் நுழைவுத் தேர்வாகும். ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு சற்று சவாலானது. இதன் காரணமாக இந்த நுழைவுத் தேர்வுகளில் மிகக் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர்.
ஒருவேளை நீங்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் கவலை வேண்டாம். ஏனெனில் இதேபோல சில பொறியியல் கல்லூரிகள் நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. அவை என்ன என்பதை பார்ப்போம்.
பிட்சாட் (Bitsat ) :
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் அட்மிஷன் டெஸ்ட் என்பது தான் இதன் அர்த்தம். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்டப்படுகிறது. JEE - க்கு பிறகு இது பெரிய நுழைவுத் தேர்வாக கருதப்படுகிறது. கணினி அறிவியல், கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு துறைகளில் பிடெக் திட்டங்களை வழங்குகிறது. பிட்ஷாட் முதற்கட்ட தேர்வு வருகின்ற மே 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு பொறியியல் படிக்க ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.
SRMJEE :
எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆண்டுதோறும் பொறியியல் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. எஸ்ஆர்எம் கூட்டுப் பொறியியல் நுழைவுத் தேர்வு மூலம் தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. இங்கு பொறியியல் படிப்புக்கான கட்டணம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
VITEE :
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்த நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வின் மூலம் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி போன்ற பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறலாம். இங்கு படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு VITEE நுழைவுத் தேர்வு ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 30 வரை நடத்தப்படுகிறது.
MHT CET :
MHT CET என்பது மகாராஷ்டிரா உடல்நலம் மற்றும் தொழில்நுட்ப பொது நுழைவுத் தேர்வு என்பதாகும். இந்த தேர்வு மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பொறியியல், மருந்தியல் மற்றும் பிற பாடதிட்டங்களில் சேருவதற்கான மாநில அளவிலான நுழைவுத் தேர்வாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி முதல் மார்ச் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 17 ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 1.2 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
KIITEE :
கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT), கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி நுழைவுத் தேர்வை (KIITEE) நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வு மூலம் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் போன்ற பி.டெக் படிப்புகளில் சேரலாம். இங்கு ரூ.1.8 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment