Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 2, 2024

RTE Admission - தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 12 ( 1 ) ( c ) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் ( LKG / Std ) குறைந்த பட்சம் 25 % இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன . அவ்வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2013-14 முதல் 2023-2024 ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர் . சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக , வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வகையில் , வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு . பார்வை ( 5 ) இல் கண்ட அரசாணையில் கூடுதல் வழிகாட்டுதலும் திருத்திய கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி RTE Act 2009 பிரிவு 12 ( 1 ) ( சி ) யின் 25 % இடஒதுக்கீடு அடிப்படையிலாக மாணாக்கர்கள் சேர்க்கை குறித்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் மேற்காண் நடைமுறை ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 29 க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTE Admission Circular 2024 - TN Private Schools Director - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News