சென்னை அசோக் நகரில் இலவசமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி (கிராஷ் கோர்ஸ்) வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வரும் ஏப்.25ம் தேதி கடைசி நாளாகும்.
இதுதொடர்பாக குரு விருக்ஷா ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அசோக் நகர் ஆஞ்சநேயர் பக்தசபா அறக்கட்டளை சார்பில் "குரு விருக்ஷா ஐஏஎஸ் அகாடமி" அசோக் நகரில் தொடங்கப்படுகிறது. இங்கு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில், பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இணைந்து பயனடையலாம். முற்றிலும் இலவச பயிற்சி, மாதிரி தேர்வு முதலானவை சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கப்படும்.
தகுதி தேர்வு, நேர்முக தேர்வு வாயிலாக இந்த பயிற்சியில் சேர்வதற்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஒரு பேட்ச்சில் 40 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட இருப்பதால் கீழ்க் கண்ட இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். 200 கேள்விகள்; மொத்த தேர்வு- 27; முழு மாதிரி தேர்வு-3 மொத்த கேள்விகள்- 5400; முதல் தேர்வு ஆரம்பம் ஆகும் நாள் ஏப்.28, பயிற்சியில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.25ம் தேதி ஆகும். பயிற்சி குறித்த மேலும் விவரங்களுக்கு 9363923451 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்:
No comments:
Post a Comment