Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
இறைச்சி, பேக்கரி பொருட்கள், சூப், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் வாசனை மற்றும் மசாலா பொருள் கிராம்பு ஆகும்.
மறுபுறம், கிராம்பு எண்ணெய் வலி நிவாரணம், செரிமான பிரச்சனைகள் மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு உதவுதல் போன்ற மருத்துவ நோக்கங்களுக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தினமும் காலை வெறும் வயிற்றில் கிராம்பு சாப்பிடுவது பலவித உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது, பல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினமும் வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால், இரவு தூங்கும்போது ஒரு கிராம்பை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.கல்லீரல் பாதுகாப்பை உறுதி செய்யும். வயிறு மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாய் நாற்றத்தை குணப்படுத்தும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதுகாப்புக்கு சிறந்தது... நம்முடைய உடலிருக்கும் கழிவுகள், நச்சுக்களை வளர்ச்சிதை மாற்றம் செய்து அவற்றை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு பெரும் பங்கு உள்ளது.. இந்த கிராம்பில் யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க செய்கிறது. எனவே, கல்லீரலின் சிறந்த செயல்பாட்டுக்கு இந்த கிராம்பு உபயோகமாகிறது.
அஜீரணம் நீங்கும், சளிக்கு நிவாரணம் தரும். பற்கள் வலி, ஈறுகளில் வீக்கம், போன்றவைகளை கிராம்பு தீர்க்ககூடியது. தலைவலிக்கும் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தலாம், எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும். ஜீரண பிரச்சனையை தீர்க்கும். சர்கக்ரை நோயாளிகளுக்கு கிராம்பு மிகவும் அவசியமானது, இதனால் ரத்ததில் உள்ள சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். நுரையீரல் ஆரோக்கியத்திற்கு கிராம்பு உதவுகிறது. ஆஸ்துமா, சுவாச பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
கிராம்பை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கலாம். அந்த தண்ணீரை குடிக்கலாம். டீயில் கலந்து குடிக்கலாம்.
ஆனால், இரவில் தூங்க செல்லும்முன்பு 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.. தூங்க செல்லும்போது, 2 கிராம்பு சாப்பிட்டு சுடுநீர் குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.. இதனால், முகப்பருக்களும் வராமல் தடுக்கப்படும்.. பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் இந்த கிராம்பு தீர்ந்துவிடும். பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம், போன்றவைகளை கிராம்பு தீர்க்கக்கூடியது.. பல் வலி மட்டுமல்ல, காது வலி என்றாலும்கூட, கிராம்பு போதும்.அதுமட்டுமல்ல, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் படுக்கும் முன்பு, கிராம்பை வாயில் போட்டு சாப்பிட்டால், அது மன அழுத்தத்தை குறைத்து நன்றாக தூக்கம் வர உதவுகிறது.. கிராம்பு சாப்பிடுவதால் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கிறது. எடையையும் எளிதாக குறைத்துவிடலாம்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை கிராம்பு பொடி உட்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது மற்றும் பீட்டா செல் செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர் அரூஷி கார்க் கூறினார்.
பல் ஆரோக்கியம்
பல் வலி நிவாரணியாக கிராம்பு காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனுடன் வாய் அழற்சி, ஈறு அழற்சி மற்றும் வாய் துர்நாற்றத்தை எதிர்க்கிறது.
காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்தது. புத்துணர்ச்சியடையச் செய்கிறது. கிராம்பின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நாள் முழுவதும் வாய் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் உறுதி செய்கிறது.
செரிமான பிரச்சனைக்கு தீர்வு
கிராம்பு அதன் சூடான போக்கு காரணமாக செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.
கிராம்பு செரிமான சுரப்பிகளை மேம்படுத்தி வயிறு வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இருப்பினும், கிராம்பை அதிகமாக உட்கொள்ள கூடாது. அதிகமாக உட்கொள்ளவது ரத்தம் உறைதலை மெதுவாக்குகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர் கார்க் எச்சரிக்கிறார்.
கிராம்புகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை குடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழிக்க உதவுகின்றன. இது சிறந்த குடல் ஆரோக்கியம், செரிமானம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது.
IMPORTANT LINKS
Monday, May 20, 2024
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 அல்லது 2 கிராம்பு சாப்பிட்டுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment