Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் கடந்த மே 10ம் தேதி வெளியானது. இந்நிலையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மே 14 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி தேர்வு முடிவுகள் ஆனது dge.tn.gov.in and tnresults.nic.in எனும் இணையத்தளத்தில் நாளை காலை 9:30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி அல்லது அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகள் ஆனது மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment