Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மொத்தம் 91.55 சதவீதம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.55 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள், துணைத்தேர்வு எழுத இன்று (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அதைபோல மறுகூட்டல்/ மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகிற 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மறுதேர்வு ஜூலை 2ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment