Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் மாநில அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் படித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தொடங்கியது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம். தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற இருப்பதால் அதன் பிறகு பள்ளிகள் திறப்பு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனது.
இந்நிலையில் நடப்பாண்டில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் எனக் கூறப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதனை தொடர்ந்து ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜூன் 7 ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள். ஜூன் 10ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment