Join THAMIZHKADAL WhatsApp Groups
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம்,பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்), பிபிடி, பிஎஸ்சி கிளினிக்கள் நியூட்ரிசீயன், பிஎஸ்சி கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் உள்ளன.
இந்நிலையில், அந்த இடங்களுக்கு நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு இன்று (23-ம் தேதி) தொடங்கியது. அதன்படி, மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது,’ என்றனர்.
No comments:
Post a Comment