Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 25, 2024

குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் - TNPSC அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2, 2ஏ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, தேர்வு 2ஏ-க்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை 24.4.2024 இல் வெளியிட்டபோது தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுா மற்றும் தேர்வுக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் முதன்மை எழுத்துத் தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ஏ-இன் முதன்மைத் புதிய பாடத்திட்டமும் https://www.tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்திலும், தேர்வுத் திட்டம் https://www.tnpsc.gov.in/English/scheme.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் அவற்றை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News