Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 6, 2024

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 94.56% பேர் தேர்ச்சி.! அரசு பள்ளிகளில் 91.32% மாணவர்கள் தேர்ச்சி

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7,534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேனிலைப் பள்ளிகளில் பிளஸ்2 படிக்கின்ற மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடந்தது.

இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் தேர்வில் பங்கேற்றனர். சென்ைன நகரில் 405 மேனிலைப் பள்ளிகளை சேர்ந்த 45 ஆயிரம் மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களுக்காக சென்னை நகரில் மட்டும் 180 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக 118 விடைத்தாள் சேகரிப்பு மையங்களுடன், பிளஸ்2 தேர்வுக்கு 83 மையங்களில் விடைத்தாள் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்தன. அதற்கு பிறகு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து ஏற்கனவே தேர்வுத்துறை அறிவித்தபடி மே 6ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

இது தவிர மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் தங்களின் தேர்வு முடிகளை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இது தவிர அரசுத் தேர்வுகள் துறையின் www. dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணைய தளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

* தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி

* தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்

* 97.42% பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2வது இடம், 97.25% பெற்று அரியலூர் மாவட்டம் 3வது இடம்

* கடந்த ஆண்டை விட 0.53% மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்வு

* 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

* தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 7,532 பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2478.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News