Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 14, 2024

வைகாசி 2024 மாதப் பலன்கள் - மிதுனம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ - லாப ஸ்தானத்தில் புதன், சுக் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

20-05-2024 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

24-05-2024 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-05-2024 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

09-06-2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

13-06-2024 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடிக்கும் திறமை உடைய மிதுன ராசியினரே நீங்கள் எடுக்கும் முடிக்கும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகே இருக்கும். இந்த மாதம் ராசியில் சுக்கிரன் இருப்பதால் பொருள் வரவையும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

செய் தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மன மகிழ்ச்சி கொள்வீர்கள்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

கலைக்காரகன் சுக்கிரனின் இருப்பால் கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

மிருகசீரிடம் - 3, 4:

இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.

திருவாதிரை:

இந்த மாதம் புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.

புனர்பூசம் - 1, 2, 3:

இந்த மாதம் மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும்நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்;

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 01, 02

அதிர்ஷ்ட தினங்கள்: மே 26, 27

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News