Join THAMIZHKADAL WhatsApp Groups
இனி தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் மூன்று ஷிப்ட் முறையில் பணி நேரம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
காலை 6:00 மணி முதல் மதியம் 2 வரை முதல் ஷிப்ட் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதியம் ஒரு மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டாவது ஷிப்ட் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரவு எட்டு மணி முதல் மாலை 6:00 மணி வரை மூன்றாவது ஷிப்ட் பணியரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஷிப்ட் முறைப்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் மறுசுழற்சி அடிப்படையில் பணி செய்வர் என்று கூறியுள்ளனர்.
இந்த முதல் சுழற்சியில் செவிலியரின் உதவியாளர்கள் கடைநிலை ஊழியர்கள் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 50 சதவீதம் பேர் இதில் அடங்குவர்.
இதனடுத்து வரும் சுழற்சியில் 25 சதவீதமும் அதற்கு அடுத்து வரும் மூன்றாவது சுழற்சியில் 25 சதவீதம் என்று பிரிக்கப்பட்டு ஊழியர்கள் பணி செய்யப்படுவர் என தமிழக அரசாணையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment