Join THAMIZHKADAL WhatsApp Groups
1. காலை நேர வாக்கிங்
உடலுழைப்பு ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. அதுவும் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைப்பதோடு, உடலும் நன்கு ஃபிட்டாக இருக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளும் சமநிலையில் பராமரிக்கப்படும். அதற்கு காலையில் செய்ய ஏற்ற மிகச்சிறந்த மற்றும் எளிய உடற்பயிற்சி தான் வாக்கிங். அதுவும் வாரத்திற்கு 3 நாட்கள் குறைந்தது 5 கிமீ நடைப்பயிற்சி, அடுத்த 2 நாட்கள் 30 நிமிட மிதமான தீவிர உடற்பயிற்சி மற்றும் 1 நாள் ரெஸ்ட் என வழக்கமாக கொண்டிருந்தால், அது உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை 5 சதவீதம் அதிகரிக்கும்.
2. க்ரீன் டீ குடிப்பது
காலையில் எழுந்ததும் சூடாக ஏதாவது குடித்தால் தான் பலருக்கும் அந்நாள் சிறப்பாக இருப்பதை உணர்வார்கள். அதற்கு காலையில் பால், காபி என்று குடிப்பதற்கு பதிலாக க்ரீன் டீயைக் குடிப்பது நல்லது. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. எனவே க்ரீன் டீ குடிக்கும் வழக்கத்தை கொள்வது நல்லது.
3. தியானம் செய்வது
எவ்வளவு தான் உடற்பயிற்சிலும், உணவிலும் கவனத்தை செலுத்தினாலும், மனம் ரிலாக்ஸாக இருந்தால் தான் எதுவும் வேலை செய்யும். அப்படி மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க தினமும் காலையில் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட வேண்டும். மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் மனஅழுத்தம் அதிகரிக்கும் போது, அது இரத்த குழாய்களை சேதடையச் செய்யும். அதுவே ரிலாக்ஸாக வைத்திருக்க தியானத்தில் ஈடுபட்டால், அது கொலஸ்ட்ரால் அளவை 14 mg/dL வரை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தியானத்தில் ஈடுபடுங்கள்.
4. வால்நட்ஸ் சாப்பிடவும்
நட்ஸ்கள் மிகச்சிறந்த ஸ்நாக்ஸ்கள். அதுவும் மூளையின் தோற்றத்தைக் கொண்ட வால்நட்ஸ் ஒருவரது கொலஸ்ட்ரால் அளவை கணிசமாக குறைக்க உதவக்கூடியவை. ஏனெனில் இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. ஆய்வுகளில் தினமும் வால்நட்ஸை உட்கொண்டு வந்தவர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தினமும் காலை உணவில் வால்நட்ஸை சேர்த்து வாருங்கள்.
5. ஆளி விதைகளை உட்கொள்ளவும்
நட்ஸ்களுக்கு அடுத்ததாக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை தான் விதைகள். அதுவும் ஆளி விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இவை இரண்டுமே கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கணிசமாக குறைக்கக்கூடியவை. அதற்கு ஆளி விதைகளை காலை உணவில் சேர்க்கலாம் அல்லது ஒரு டீஸ்பூன் வறுத்த ஆளி விதையை அப்படியே மென்று சாப்பிடலாம். ஆளிவிதையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதை உட்கொள்ளும் போது மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை காலையில் தவறாமல் மேற்கொண்டு வருவதன் மூலம், மாரடைப்பை வர தூண்டும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.
No comments:
Post a Comment