Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 21, 2024

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கி வேலை நாட்கள்


வங்கி ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த யோசனையானது வாங்கி சேவைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் வங்கி சேவையில் ஏற்பட கூடிய எதிர்மறை தாக்கம், இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விஷயங்கள் கவலைக்குரியதாக இருக்குமா என்ற விவாதம் நாடு முழுவதும் எழுந்துள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற யோசனையை இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டாலும், அரசு தரப்பிலிருந்து இன்னும் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. குறுகிய வங்கி வேலை வாரத்தின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தில் சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

குறைவான வேலை நாட்கள், அதிக திட்டமிடல்? வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் அமலுக்கு வந்தால் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடியிருக்கும் என்பதால் வார நாட்களில் நீண்ட வரிசைகள் மற்றும் வாங்கி வேலைகளை முடிப்பதில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. எனினும் ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப்ஸ்ளுக்கான பயன்பாடு இன்னும் முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் வங்கி விடுமுறை அதிகரிக்கும் என்பதால் வழக்கமான வங்கி செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வங்கிகள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். இதனால் வங்கியின் தினசரி வேலை நேரம் நீடிப்பதோடு டிஜிட்டல் மற்றும் ஏடிஎம் சேவைகளையும் அதிகரிக்க வேண்டியிருக்கும். சமீபத்தில் வெளியான அறிக்கைகளின்படி, வங்கிகள் தங்கள் வேலை நேரத்தை மாற்றியமைக்க கூடும். வங்கிகளின் புதிய வேலை நேரம் காலை 9:45 மணி முதல் மாலை 5:30 மணி வரை இருக்கலாம். 1 நாள் வேலை இழப்பை ஈடுகட்ட நாளொன்றுக்கு 40 நிமிடங்கள் கூடுதலாக ஊழியர்கள் வேலை பார்க்க நேரிடலாம்.

வாடிக்கையாளர்களுக்காக வங்கிகள் என்ன செய்யுமென்று எதிர்பார்க்கலாம்.?

- வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் அதன் தாக்கத்தை குறைக்க வங்கிகள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை வேகமான ப்ராசஸிங் மூலம் ஊக்குவிக்கலாம், ,ஆன்லைன் பேங்கிங் நேரத்தை நீட்டிக்கலாம் மற்றும் யூசர் இன்டர்ஃபேஸை இன்னும் யூசர்-ஃபிரெண்ட்லியாக மேம்படுத்தலாம்.

- தனிப்பட்ட கவனம் தேவைப்படும் காம்ப்ளக்ஸ் பரிவர்த்தனைகளுக்காக (Complex transactions), அப்பாயின்மென்ட் சிஸ்டமை கொண்டு வரலாம், இதன் மூலம் வாடிக்கையாளருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தை உறுதி செய்யலாம்.'

- வாரத்தின் 2 இறுதி நாட்களுமே மூடப்பட்டால் வங்கிகள் தங்களின் வார வேலை நாட்களில் கூடுதலாக வேலை செய்யலாம். குறிப்பாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி பணிகளை முடிக்க ஏதுவாக மாலையில் வேலை நேரத்தை நீட்டிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம்.?

- பில் பேமென்ட்ஸ், பணப்பரிமாற்றம் மற்றும் அக்கவுண்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட விஷயங்களுக்காக ஆன்லைன் பேங்கிங் அம்சங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளலாம்.

- பேலன்ஸை சரிபார்க்க மற்றும் விரைவான பணப் பரிமாற்றங்களை செய்ய போன்ற வங்கித் தேவைகளுக்கு உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்-ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

- நேரில் உதவி தேவைப்படும் complex transactions-களுக்கான சந்திப்புகளை அப்பாயின்மென்ட்ஸ்களை முன்கூட்டியே திட்டமிடலாம்.

- வங்கிகளுக்கு சென்று காத்திருக்கும் நேரத்தை குறைக்க பீக்-அவர் எதுவென்று தெரிந்து கொண்டு அந்த நேரத்திற்கு செல்லாமல் கூட்டம் குறைவாக இருக்கும் நேரத்திற்கு செல்லலாம்.

முன்னதாக கடந்த டிசம்பர் 2023-ல், அரசால் நடத்தப்படும் மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் வங்கி தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு 5 நாள் வேலை வாரத்திற்கான முன்மொழிவை உள்ளடக்கியது.

இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 8, 2024 அன்று, 9வது ஜாயின்ட் நோட்டில் IBA மற்றும் வங்கி தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன. ஐபிஏ மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கையொப்பமிட்ட ஜாயின்ட் நோட்டானது, சனி மற்றும் ஞாயிறு விடுமுறையுடன் 5-நாள் மட்டுமே வேலை இருக்க கூடிய மாற்றத்தை கோடிட்டு காட்டியது.

IBA மற்றும் வங்கி தொழிற்சங்கங்கள் 5 நாட்கள் மட்டுமே கொண்ட வேலை வாரத்திற்கு ஒப்புக்கொண்டாலும், இறுதி முடிவு அரசிடம் உள்ளது. வங்கி வேலை நேரம் மற்றும் வங்கிகளுக்கிடையேயான செயல்பாடுகளை RBI ஒழுங்குபடுத்துவதால், உத்து குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்படும். இது குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ காலக்கெடு எதுவும் அரசால் அறிவிக்கப்படவில்லை.

எனினும் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 5 நாள் வேலை வாரம் குடித்த அறிவிப்பு வெளியாக கூடும் என எதிர்பார்ப்பதாக சில வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். தற்போது ஒரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment