Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 6, 2024

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

அதில், தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதில், திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 97.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். 

சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் 97.42 சதவிகிதம் தேர்ச்சியுடம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் 396 அரசுப் பள்ளிகள் உள்பட 2,478 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் 90.47 சதவிகிதம் பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவிகிதம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News