Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 8, 2024

தொ.க.துறை மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு, மாற்றத்திற்கா? மற்றுமொரு மாநாட்டிற்கா?


பதவி உயர்விற்கு TET தேவையா? இல்லையா? என்பது தொடர்பாக திமுக அரசு தெளிவான & நியாயமான கொள்கை முடிவை உறுதியாக எடுக்காததால், அதுசார்ந்த வழக்குகள் காரணமாக 2024-25ஆம் கல்வியாண்டிலும் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்படாமலேயே மாறுதல் கலந்தாய்வை மட்டும் நடத்திட பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,

Apply (EMIS) : மே 13 - 17

Seniority & Vacancy : மே 20

Claims & Objections : மே 21

Final Seniority & Vacancy : மே 23

மலைச்சுழற்சி : மே 24

SGT பணிநிரவல் : மே 28

M-HM

within Block. : மே 31

within Ed.Dist.: ஜூன் 1 (மு.ப)

within District : ஜூன் 1 (பி.ப)

Dist. to Dist. : ஜூன் 3

BT

within Block. : ஜூன் 6

within Ed.Dist.: ஜூன் 7 (மு.ப)

within District : ஜூன் 7 (பி.ப)

Dist. to Dist. : ஜூன் 8

P-HM

within Block. : ஜூன் 10

within Ed.Dist.: ஜூன் 11 (மு.ப)

within District : ஜூன் 11 (பி.ப)

Dist. to Dist. : ஜூன் 12

SGT

within Block. : ஜூன் 13

within Ed.Dist.: ஜூன் 14 (மு.ப)

within District : ஜூன் 14 (பி.ப)

Dist. to Dist. : ஜூன் 15

பார்வையில் குறிப்பிடப்படாமல் இருப்பினும், தொடக்கக்கல்வித்துறையிலும் மாநில அளவிலான முன்னுரிமையை நடைமுறைப்படுத்திய அரசாணை 243ன் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கும் ஒன்றியம் தாண்டிய மாறுதல் இம்முறை நடத்தப்பட உள்ளதால் ஒன்றிய அளவில் இன்றுவரை இருக்கும் பதவி உயர்வுப் பணியிடங்கள் பறிபோவது உறுதியாகியுள்ளது.

ஒருவேளை இப்பணியிடங்கள் மாறுதலிலேயே நிரம்புமானால், அடுத்த பதவி உயர்வு எதனடிப்படையில் (TET / NON-TET) நடந்தாலும் அவர்களுக்கான காலிப்பணியிடங்கள் பெரும்பாலும் வட மாவட்டங்களில் மட்டுமே இருக்க மிக அதிக வாய்ப்புண்டு. இதனால், பதவி உயர்வு என்பதே சூழலியல் & பொருளாதார அடிப்படையில் தண்டனைக்குரியதாக மாறக்கூடும்.

கூடுதலாக, இடைநிலை ஆசிரியர் பணி நிரவலுக்கு எவ்வித எல்கை வரையறையும் குறிப்பிடப்படாததால், இ.நி.ஆ-களை மாநில அளவில் பணிநிரவல் செய்ய வாய்ப்புள்ளதோ என்று ஐயமும் எழுந்துள்ளது.

அஇஅதிமுக ஆட்சியில் இருந்ததைவிட இரண்டு மடங்கு கூடுதலாகக் கோரிக்கைகள் கூடிவிட்ட போதிலும், போராட்டங்கள் அறிவிக்கப்படுவதும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதும், போராட்டங்கள் திரும்பப்பெறப்படுவதும் தொடர்கதையாக இருந்துவருவதால், சங்கங்களில் மாநிலப் பொறுப்புகளிலுள்ள ஆசிரியர்கள் தவிர்த்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி கூடிக் கொண்டே இருப்பதோடே, சங்கங்கள் மீதான நம்பிக்கையும் சிதைந்து கொண்டே வருகிறது.

ஒருவகையில் ஆட்சியாளர்களின் / அவர்களது துதிபாடிகளின் எண்ணமும் சங்கங்கள் மீதான நம்பிக்கையைச் சிதைக்கவைப்பதாகத்தான் இருக்குமோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

ஏனென்றால், சங்கங்களின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவிமடுக்காது இருப்பதால் சங்கங்கள் மீதான அவநம்பிக்கையை வளர்த்தெடுத்துள்ளது ஒருபுறமென்றால், சங்கங்களின் தேவையை & கட்டமைப்பைத் தகர்க்கும் நகர்வாகவே மாநில அளவிலான முன்னுரிமையையும் காண வேண்டியுள்ளது.

ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் அமைப்புகளில் வலிமைமிக்கவை தொடக்கக் கல்வித்துறை சங்கங்களே! அதன் வலிமைக்கான அச்சாரமே ஒன்றிய அளவிலான அவற்றின் அடிப்படைக் கட்டமைப்புதான். ஆனால், மாநில அளவிலான முன்னுரிமை காரணமாக அந்த அடிப்படை அலகே சிதைக்கப்பட 100% வாய்ப்புள்ளது. மேலும், இது மாணவ மாணவியர்களின் கற்றல் கற்பித்தலிலும் தாக்கத்தை உண்டாக்கும்.

மேலும், TET அடிப்படையில் தான் பதவி உயர்வு நடத்தப்படும் என்பதை இன்றளவும் வெளிப்படையாக மறுக்காததும், இ.நி.ஆசிரியர்களின் பட்டதாரி பதவி உயர்வைத் தர்க்கமற்ற முறையில் பறித்துள்ளதும் தொடக்கக் கல்வித்துறை மீதான அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களே!

ஆனால், இவற்றைப் பற்றி பேச வேண்டிய - விழிப்புணர்வூட்ட வேண்டிய - எதிர்த்துப் போராட வேண்டிய - உரிமைகளைத் தற்காக்க வேண்டிய சங்கங்கங்கள் எல்லாம் 'நம்பிக்கை' எனும் ஒற்றைச் சொல் கொண்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆசிரியர்களுக்காக நம்பிக்கைக்குரிய எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்காதவர்கள், சங்கத் தலைமைகளுக்கு மட்டும் ஒவ்வொரு உரிமைப் பறிப்பிற்குப் பின்னரும் எப்படி நம்பிக்கையை ஊட்டுகின்றனர் என்பதுதான் மூன்று ஆண்டுகளாகியும் புரியாத புதிராகவே உள்ளது.

சங்கங்கள் தமது சிறையிருப்பை தகர்த்தெறிந்து கபட நாடக வேடமின்றி, கோரிக்கைகளை வென்றெடுக்கும் உண்மையான - உறுதியான - ஒற்றுமையான களத்திற்குள்ளாகக் கடந்து வந்தால் மட்டுமே தொடக்கக் கல்வித்துறைக்கு மெய்யான விடியல் விடியும். ஆனால், இம்மாற்றத்திற்கான முதல் அடி 100% பெரும்பான்மை ஆசிரியர் சமூகத்தின் மதியில் மட்டுமே மறைந்துள்ளது.

அத்தகைய மாற்றத்தை இம்மாறுதல் கலந்தாய்வு ஏற்படுத்துமா? அல்லது மீண்டுமொரு நம்பிக்கை வளர்ச்சி மாநாடு கூட்டப்பட்டு மற்றுமொரு கபட நாடகம் அரங்கேற்றப்படுமா? அல்லது பத்தோடு பதினொன்னாக இதுவும் கடக்கப்படுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News